ஜோ பிடனை கடுமையாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப்..

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஜோ பிடனை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகவும் வலியுறுத்தி உள்ளார்.

இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகளை திரும்ப பெறுதல் அல்ல, சரணடைதல் என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். சரியான எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வெளியேற்றியுள்ளதாகவும் கூறினார்.

தான் ஆட்சியில் இருந்திருந்தால் முதலில் அமெரிக்க மக்களை வெளியேற்றி ஆயுதங்களையும் திரும்ப பெற்றிருப்பேன். மேலும் இராணுவ தளங்களை தகர்த்து விட்டு யாருக்கும் சந்தேகம் வராத வரையில் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க படைகளை பின்வாங்கி இருப்பேன் என ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதாக கூறி தாலிபான்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் ஆப்கன் அரசாங்கத்துடன் சமாதான பேச்சுவார்த்தைக்கும் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியது.

இந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் சில நாட்களிலேயே தாலிபான்கள் தலைநகரை கைப்பற்றினர். இது அமெரிக்கா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது குறித்து ஜோ பிடன் குறிப்பிடுகையில், நாங்கள் அல் கொய்தா மற்றும் ஒசாமா பின்லேடனை அழிப்பதற்காகவே ஆப்கானிஸ்தான் வந்ததாகவும் அது நிறைவேறியதால் தற்போது அமெரிக்கப்படைகள் பின்வாங்கப்படுவதாகவும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published.