பொக்ரானில் SANT ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO மற்றும் IAF..

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய விமானப்படை இணைந்து சனிக்கிழமை அன்று பொக்ரானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஸ்டாண்ட் ஆஃப் ஆண்டி டேங்க் (SANT) ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த ஏவுகணை 10 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடியது. மேலும் இந்த ஏவுகணையில் அதிநவீன மில்லிமீட்டர் அலை (MMW) சீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான தூரத்தில் இருந்து அதிக துல்லியமான தாக்குதல் திறனை வழங்குகிறது.

இந்த ஹெலிகாப்டர் சோதனையானது அனைத்து நோக்கங்களையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்ததாக கூறப்பட்டுள்ளது. வெளியீட்டு வழிமுறை, மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள், ஒருங்கிணைந்த மென்பொருளுடன் கூடிய அனைத்து ஏளியோனிக்ஸ் ஆகியவை திருப்திகரமாக செயல்பட்டதாக DRDO அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை கண்காணிப்பு அமைப்புகள் அனைத்து பணி நிகழ்வுகளையும் கண்காணித்ததாக கூறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து SANT ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த வீடியோவை DRDO வெளியிட்டுள்ளது. இந்த SANT ஏவுகணை சோதனையானது இந்திய விமானப்படையின் ஆயுத களஞ்சியத்தை மேலும் வலுபடுத்தும் வகையில் நீண்ட தூர வெடிகுண்டு மற்றும் ஸ்மார்ட் ஆண்டி ஏர்ஃபீல்டு வெப்பன் (SAAW) ஆகியவற்றிற்கு பிறகு சமீபத்திய காலங்களில் சோதிக்கப்படும் உள்நாட்டு ஸ்டாண்ட் ஆஃப் ஆயுதங்களின் வரிசையில் இது மூன்றாவது சோதனை ஆகும்.

Also Read: பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்ட உள்நாட்டு வளர்ச்சிகள் பாதுகாப்பில் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ நோக்கி ஒரு உறுதியான அணிவகுப்பு என DRDO அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. DRDO தலைவர் ஜி சதீஷ் ரெட்டி கூறுகையில், SANT ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேலும் வலுபடுத்தும் என அவர் தெரிவித்தார்.

Also Read: இந்தியாவின் அடுத்த CDS யார்..? இராணுவ தளபதி எம்எம் நரவனேவா அல்லது விஆர் சவுதாரியா..?

இந்த SANT ஏவுகணையானது ஹெலினா ஏவுகணையின் நான்காவது தலைமுறை மேம்படுத்தப்பட்ட ஏவுகணை ஆகும். நீண்ட தூர வான்வழி எதிர்ப்பு கவச பாத்திரத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பில் எலக்ட்ரோ ஆப்டிகல் தெர்மர் இமேஜர் உள்ளது. மேலும் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்ட வரம்பை கொண்ட புதிய மில்லி மீட்டர் வேவ் ஆக்டிவ் ரேடார் ரோமிங் (MMW) சீக்கர் பொருத்தப்பட்டுள்ளது.

Also Read: மேம்படுத்தப்பட்ட பினாகா ER ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

ஏவுகணை சோதனையை அடுத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த SANT ஏவுகணையானது மற்ற DRDO ஆய்வகங்களுடனும் தொழிற்துறையின் பங்கேற்புடனும் ஒருங்கிணைந்து ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையம் இமராட் (RCI) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று பினாகா ER மேம்பட்ட ராக்கெட்டையும் DRDO வெற்றிகரமாக சோதனை செய்தது.

Leave a Reply

Your email address will not be published.