எதிரிகளின் ஏவுகணையை குழப்பும் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ள DRDO..

இந்தியாவின் DRDO ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய விமானங்களை பாதுகாக்கும் சாஃப் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழிற்நுட்பம் மூலம் எதிரி நாட்டு எவுகணைகளிடம் இருந்து நமது விமானங்களை பாதுகாக்க முடியும் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ள DRDO ஆய்வகம், புனேவில் உள்ள இந்திய விமானப்படையின் ஆய்வகத்துடன் இணைந்து இந்த சாஃப் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

DRDO ஏற்கனவே கடற்படை கப்பலை பாதுகாக்க இதே போன்ற தொழிற்நுட்பத்தை சில மாதங்களுக்கு முன்பு உருவாக்கி இருந்தது. தற்போது விமானப்படை விமானங்களை பாதுகாக்க அதே போன்ற சாஃப் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

விமானத்தில் தோட்டாவாக சேமிக்கப்படும் இந்த சாஃப் தொழிற்நுட்பமானது துத்தநாகம் பூசப்பட்ட இழைகளால் ஆனது. எதிரிகளின் ஏவுகணைகளை குழப்ப இது வெப்பத்தை உருவாக்கி ரேடார் ட்ராக்கிங் ஏவுகணைகளை தவறாக வழிநடத்துகிறது.

இந்த சாஃப் தொழிற்நுட்பத்தை மூன்று வகைகளில் உருவாக்கி உள்ளதாக DRDO தெரிவித்துள்ளது. முதல் வகை குறுகிய தூர சாஃப் ராக்கெட் வகை ஆகும். இரண்டாவது நடுத்தர வகை மற்றும் மூன்றாவது நீண்டதூர சாஃப் ராக்கெட் வகை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.