அபியாஸ் அதிவேக வான்வழி விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

அதிவேகமாக செல்லக்கூடிய வான்வழி விமானத்தை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் இந்த அபியாஸ் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பிடுவதற்கு இந்த அபியாஸ் விமானத்தை வான்வழி இலக்காக பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பு உள்ளிட்ட உளவு பணிகளுக்கும் பயன்படுத்த முடியும்.

பெங்களூருவில் உள்ள DRDO கீழ் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மன்டால் இந்த அபியாஸ் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா விமானமானத்தின் செயல்திறன், எலக்ட்ரோ ஆப்டிகல் ட்ராக்கிங் சிஸ்டம், ராடார்கள் மற்றும் பல்வேறு டிராக்கிங் சிஸ்டம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இலக்கு வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டிற்காக விமான கட்டுப்பாட்டு கணினி உடன் இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வானில் செலுத்துவதற்கு இரட்டை அண்டர் ஸ்லாங் பூஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர் சப்சோனிக் வேகத்தில் செல்வதற்காக ஒரு கேஸ் டர்பிப் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது.

Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை

DRDO தலைவர் சதீஷ் ரெட்டி, DRDO பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை அடுத்து DRDO மற்றும் விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

Also Read: மும்பை அருகே விமானந்தாங்கி கப்பலில் செங்குத்தாக தரை இறங்கிய போர் விமானம்..

Leave a Reply

Your email address will not be published.