பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பு கப்பல் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரை சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இந்த பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10:30 மணி அளவில் சூப்பர்சோனிக் போர் விமானமான சுகோய்-30 MKI போர் விமானத்தில் இருந்து இந்த வான் பதிப்பு ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பிரமோஸ் ஏவுகணை வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

ராம்ஜெட் இயந்திரத்தின் முக்கிய ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஏர்ஃபிரேம் அசெம்பிளிகள் உள்நாட்டிலேயே இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ராம்ஜெட் எரிபொருள் அமைப்பு மற்றும் நியூமேடிக் எரிபொருள் விநியோக அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உலோகம் அல்லாத ஏர்ஃபிரேம் பிரிவுகள் அடங்கும்.

சோதனையின் போது ஏவுகணையின் கட்டமைப்பு ஒருமைபாடு மற்றும் செயல்திறன் ஆகியவை ஏதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாக DRDO தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வான் பதிப்பு பிரமோஸ் ஏவுகணை கடைசியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழிக்க சீனா போட்ட திட்டம்..

பிரமோஸ் ஏவுகணையானது இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPOM ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய ஆயுத படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று சண்டிப்பூரை தளமாக கொண்ட ITRல் இருந்து செங்குத்தாக ஏவப்பட்ட குறுகிய தூர மேற்பரப்பு வான் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

Also Read: பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம்..? சிக்கலில் இம்ரான்கான்.. நேட்டோ, பாகிஸ்தான் இராணுவம் இடையே பேச்சுவார்த்தை..

இந்த நிலையில் இன்று பிரமோஸ் ஏவுகணையின் வான் பதிப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. வான் பதிப்பு பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை அடுத்து DRDO, இந்திய விமானப்படை மற்றும் தொழிற்துறையினருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட அனைவருக்கும் DRDO தலைவர் சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..

Leave a Reply

Your email address will not be published.