அதிவேக வான்வழி இலக்கு HEAT அபயாஸ் ட்ரோன் சோதனையை வெற்றிகரமாக நடத்திய DRDO..

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக வான்வழி இலக்கு (HEAT) அபயாஸின் விமானச்சோதனையை நேற்று வெற்றிகரமாக நடத்தியது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சில் இருந்து இந்த ஆளில்லா விமானச்சோதனை நடத்தப்பட்டது.

விமான சோதனையின் போது, மிகக்குறைந்த உயரத்தில் அதிக சகிப்புத்தன்மையுடன் கூடிய உயர் சப்சோனிக் பாதை நிருபிக்கப்பட்டதாக DRDO தெரிவித்துள்ளது. துவக்கத்தில் அபயாஸ் இரண்டு 68 மிமீ பூஸ்டர் ராக்கெட்டுகளின் உதவியுடன் மொபைல் லாஞ்சர்களில் இருந்து ஏவப்படுகிறது. அதன் பிறகு ஒரு சிறிய டர்போ ஜெட் இயந்திரம் மூலம் நீண்ட சகிப்பு தன்மையுடன் அதிக சப்சோனிக் வேகத்தை தக்கவைக்க பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு ஆளில்லா விமானமாக இருந்தாலும் தாக்குதல் ஏவுகணையாக பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. அதன்படி, இந்த அபயாஸ் ஏவுகணை தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கையும், விண்ணில் இருந்து வான் மற்றும் தரை இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது. ஜிபிஎஸ் வசதி உள்ளதால் ஏவப்பட்ட பின்னரும் இதனை வழிநடத்தி இலக்கை தாக்க முடியும். இந்த அபயாஸ் 0.5 மேக் வேகத்தில் செல்லக்கூடியது. 5 கிலோ மீட்டர் உயரம் மற்றும் 400 கிலோ மீட்டர் தூரம் வ்ரை செல்லக்கூடியது என கூறப்படுகிறது.

முழு விமான சோதனையிலும் அபயாஸின் செயல்திறன் பல்வேறு கருவிகள் மூலம் கைப்பற்றப்பட்ட தரவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படைகளின் வான்வழி இலக்குகளின் தேவையை பூர்த்தி செய்ய, ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் (ADE) மற்றும் DRDO ஆய்வகமும் மற்ற ஆய்வகங்களும் இணைந்து இந்த அபயாஸை உருவாக்கியுள்ளன.

Also Read: இந்தியா வந்தடைந்தது S-400 ஏவுகணை அமைப்பு..? பஞ்சாபில் நிலைநிறுத்த திட்டம்..?

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட MEMS அடிப்படையிலான இன்டர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ப்ளைட் கண்ட்ரோல் கம்யூட்டரின் உதவியுடன் இயக்கப்படும் வழிசெலுத்துதல் அமைப்பு மூலம் விமானம் கட்டுப்படுத்தப்படுகிறது. விமான சோதனையின் வெற்றியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் DRDO தலைவர் சதீஷ் ரெட்டி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Also Read: நடுவானில் பாதையை மாற்றும் குறுகிய தூர பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

இந்த ஆளில்லா வான்வழி வாகனமான அபயாஸை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஸ்தாபனம் வடிவமைத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அபயாஸின் உற்பத்தி, அசெம்பிளி, ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் விநியோகத்திற்கான ஆர்டரை 17 டிசம்பர் 2021 அன்று HAL நிறுவனம் பெற்றுள்ளது. இந்த அபயாஸ் ஏவுகணை இந்திய இராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: ஹைப்பர்சோனிக் ஏவுகணையை விரைவாக உருவாக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Leave a Reply

Your email address will not be published.