MRSAM ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் MRSAM என்ற தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை இன்று காலை 10:34 மணியளவில் நடத்தப்பட்டது. ஏவுதளத்தின் இரண்டரை கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஆறு கிராமங்களில் உள்ள சுமார் 7,000 கிராம மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சோதனையின் போது ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இராணுவம் தரப்பில் கூறப்பட்டது. கடந்த புதன்கிழமை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையில் நீட்டிக்கப்பட்ட மாறுபாட்டை DRDO வெற்றிகரமாக சோதனை செய்தது.

இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒடிசாவின் பாலசோர் சோதனை தளத்தில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய பதிப்பை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த நிலையில் இன்று நடத்தப்பட்ட MRSAM ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது: ஜோ பிடன்

ஏவுகணை ஏவப்பட்டதை அடுத்து அதன் ரேடார் தரவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. பிரமோஸ் ஏவுகணையானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பாகும். ஜனவரி மாதம் பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஒப்பந்தம் 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published.