அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்தியா கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி-5 அணு ஆயுத ஏவுகணையை புதன்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவில் புதன்கிழமை மாலை 7.30 மணி அளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 5,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சென்று தாக்கக்கூடியது. சமீபத்தில் தான் அடுத்த தலைமுறையான அக்னி ப்ரைம் சோதனை செய்யப்பட்டது.

அக்னி-5 ஏவுகணை சீனாவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்டது. இது மூன்று திட நிலைகளை கொண்டுள்ளது. பூமிக்கு வெளியே சென்று பூமிக்கு திரும்பும் போது அதிவேகத்துடன் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையின் முதல் சோதனை 2012 ஆம் ஆண்டிலும், கடைசி சோதனை 2018 ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் அக்னி-5 சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 5,000 கிலோ மீட்டர் சென்று தாக்கும் என்று கூறப்பட்டாலும், உண்மையான தாக்குதல் தூரம் 8,000 கிலோ மீட்டர் என கூறப்படுகிறது.

அக்னி-5 ஏவுகணையின் எடை 50 டன், 24 மேக் வேகத்தில் செல்லக்கூடியது. 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்டது. 1,000 கிலோவுக்கு அதிகமான அணு ஆயுதங்களை எடுத்து செல்ல முடியும். மேலும் இதனை சாலை வழியாக எடுத்து சென்று எங்கு வைத்து வேண்டுமானாலும் ஏவ முடியும்.

பிரதமர் கட்டளையிட்டால் மட்டுமே இந்த ஏவுகணையை ஏவ முடியும். ஏனென்றால் பிரதமருக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ளது. ஏவுகணை வெற்றியின் மூலம் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Also Read: தனது இரண்டாவது கடல் சோதனை பயணத்தை துவங்கியது IAC விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பல்..

இந்த அக்னி-5 ஏவுகணை வெடிபொருட்களை மட்டும் இல்லாமல் அணு ஆயுதம், வேதியியல் நச்சு பொருள், உயிரியியல் ஆயுதம் என பல வகையான ஆயுதங்களை எடுத்து சென்று எதிரிகளுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியும். அக்னி-5 ஏவுகணை செயற்கை கோளையும் தாக்கி அளிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் டார்பிடோக்கள்.. இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்..

மேலும் DRDO அக்னி-6 ஏவுகணையையும் உருவாக்கி வருகிறது. இதன் தாக்குதல் தூரம் 10,000 முதல் 12,000 கிலோ மீட்டர் ஆகும். முதல் மற்றும் இரண்டாவது நிலை நிலை ஆகும். மூன்றாவது திரவ நிலையை கொண்டுள்ளது. அக்னி-5 ஏவுகணை விரைவில் சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும்.

Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை

Leave a Reply

Your email address will not be published.