அணு சக்தி திறன் கொண்ட அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

அக்னி வகை ஏவுகணைகளின் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை DRDO இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த அக்னி பிரைம் ஏவுகணை 1,000 முதல் 2,000 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்ட கேனிஸ்டர் ஏவுகணை ஆகும். இந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி முதன்முதலாக அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த அக்னி பிரைம் ஏவுகணையில் நிறைய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏவுகணை சோதனை அதன் அனைத்து பணி நோக்கங்களையும் உயர்மட்ட துல்லியத்துடன் பூர்த்தி செய்ததாக DRDO கூறியுள்ளது. மேலும் கிழக்கு கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பல்வேறு டெலிமெட்ரி மற்றும் ரேடார் நிலையங்கள் ஏவுகணை சோதனையை கண்காணித்தன.

இது அக்னி வகை ஏவுகணைகளின் புதிய தலைமுறை மேம்பட்ட மாறுபாடு ஆகும். இதனை இரயில் மற்றும் சாலையில் இருந்து ஏவ முடியும். நாட்டின் எந்த மூலைக்கும் எடுத்து சென்று ஏவ கூடியது. ஏவுகணைகளின் கேனிஸ்டரைசேஷன் ஏவுகணை ஏவுவதற்கு தேவையான நேரத்தை குறைக்கிறது. அதே நேரத்தில் அதன் சேமிப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் SMART அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

அக்னி தொடர் ஏவுகணைகளில் மிகவும் சிறியது மற்றும் இலகுவானது. இது மூன்று நிலை திட எரிபொருள் ஏவுகணை ஆகும். இந்த அக்னி பிரைம் ஏவுகணை புதிய உந்துவிசை அமைப்புகள், கூட்டு ராக்கெட் மோட்டார் உறைகள், மேம்பட்ட வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தானை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதன் தாக்குதல் தூரம் சீனாவிற்கானது இல்லை. அதாவது பாகிஸ்தான் முழுவதையும், சீனாவின் குறிப்பிட்ட பகுதியையும் தாக்க முடியும்.

Also Read: ஹைப்பர்சோனிக் ஏவுகணையை விரைவாக உருவாக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இதனை DRDO வடிவமைத்து பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் உருவாக்கியுள்ளது. இதில் சூழ்ச்சி செய்யக்கூடிய மறு நுழைவு வாகனம் (MARV) என்ற மேம்படுத்தப்பட்ட அமைப்பு உள்ளது. இது தன்னிச்சையாக தரையில் இலக்கை கண்காணிக்கும் திறன் கொண்டது. ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் DRDO குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Also Read: மேம்படுத்தப்பட்ட பினாகா ER ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

Leave a Reply

Your email address will not be published.