நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் SMART அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் நீண்ட தூரம் சென்று தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை உதவி டார்பிடோ (SMART) அமைப்பை DRDO இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் நீண்ட தூரத்தில் உள்ள எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்க முடியும்.
இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த இந்த SMART அமைப்பு உதவும். இந்த SMART அமைப்பு அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான ஸ்டாண்ட் ஆஃப் டார்பிடோ டெலிவரி அமைப்பு ஆகும். இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை மூலம் நீர்மூழ்கி கப்பலுக்கு அருகில் சென்று டார்பிடோவை ஏவ முடியும்.
டார்பிடோவின் வழக்கமான வரம்பிற்கு அப்பால் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக DRDO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அமைப்பின் சோதனை எலக்ட்ரோ-ஆப்டிக் டெலிமெட்ரி அமைப்பு, டவுன்ரேஞ்ச் இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் டவுன்ரேஞ்ச் ஷிப்கள் உள்ளிட்ட பல்வேறு ரேஞ்ச் ரேடார்களால் கண்காணிக்கப்பட்டது.
இந்த கேனிஸ்டர் அடிப்படையிலான ஏவுகணை அமைப்பு இரண்டு நிலை திட உந்து விசை, எலக்ட்ரோ-மெக்கானிக்கல் ஆக்சுவேட்டர்கள் மற்றும் துல்லியமான செயலற்ற வழிசெலுத்தல் போன்ற மேம்பட்ட தொழிற்நுட்பங்களை கொண்டுள்ளதாக DRDO தெரிவித்துள்ளது. மேலும் இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை தரை லாஞ்சர்களில் இருந்து ஏவப்பட்டு இலக்கிற்கு அருகில் சென்று நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கு டார்பிடோக்களை இலக்கை நோக்கி செலுத்தும்.
Also Read: மேம்படுத்தப்பட்ட பினாகா ER ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
SMART என்பது ஏவுகணை உதவியுடன் கூடிய இலகுரக நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ அமைப்பு ஆகும். இந்திய கடற்படைக்காக DRDO இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு இந்தியா இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியால் வெளியிடப்பட்ட டார்பிடோ அமைப்பை அக்டோபர் 5, 2020 அன்று சோதனை செய்தது.
Also Read: பொக்ரானில் SANT ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO மற்றும் IAF..
டிசம்பர் 8 ஆம் தேதி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசா கடற்கரையின் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின் விமான பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை இந்திய விமானப்படையின் சுகோய் 30 MKI போர் விமானத்தில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் வான் பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..