அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..
இன்டர்கான்டினென்டினல் பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-V சோதனை நடத்தப்பட உள்ளதாக வரும் செய்தியினை DRDO மறுத்துள்ளது. மேலும் அடுத்த 20 நாட்களுக்கு அணுசக்தி திறன் கொண்ட எந்த ஏவுகணையையும் பரிசோதிக்கும் திட்டம் இல்லை எனவும் கூறியுள்ளது.
DRDO, MRSAM என்ற நடுத்தர ரக வான் பதுகாப்பு அமைப்பை இந்திய விமானப்படைக்கு வழங்கிய சில வாரங்களுக்கு பிறகு இந்த அக்னி-V சோதனை நடத்த திட்டமிட்டதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டே சோதனை நடத்த திட்டமிட்ட நிலையில் கோவிட் காரணமாக சோதனை செய்ய முடியவில்லை.
DRDO மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் இணைந்து அக்னி ஏவுகணையை உருவாக்கி உள்ளன. அக்னி-V 17 மீட்டர் உயரமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்டது. இதன் எடை 50,000 கிலோ ஆகும். இதன் வேகம் விநாடிக்கு 8.16 கிலோ மீட்டர் ஆகும். மேக் 24 வேகத்தில் பயணிக்க கூடியது. மணிக்கு 29,401 கிலோ மீட்டர் வேகத்தை அடையக்கூடியது. இதன் அதிகபட்ச தாக்குதல் தூரம் 8,000 கிலோ மீட்டர் ஆகும்.
ஒரு ஏவுகணை தயாரிக்க 50 கோடி செலவாகும் என கூறப்படுகிறது. மொபைல் லாஞ்சர் மூலம் இதனை ஏவ முடியும். மேலும் ரிங் லேசர் கைரோஸ்கோப் இன்டஷியல் நேவிகேஷன் சிஸ்டம் (NavIC) என்ற அமைப்பின் மூலம் செயற்கைகோள் வழிகாட்டுதலுடன் செயல்பட முடியும்.
ஏவுகணை அதன் உச்சத்தை அடைந்த பிறகு புவிஈர்ப்பு விசை காரணமாக அது பூமியில் உள்ள இலக்கை நோக்கி அதிவேகத்தில் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றின் உராய்வு காரணமாக அதன் மேற்பரப்பில் 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை உருவாகும். இருப்பினும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள உட்புற வெப்பகவசம் அதனை 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைத்திருக்கும்.
Also Read: காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர் எர்டோகன்.. பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்..
அக்னி-V ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்க கூடியது. ஏற்கனவே அக்னி-V ஏழு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. 2012, 2013, 2015, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு ஐனவரி, ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2020 சோதனை செய்யப்பட இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை DRDO மறுத்துள்ளது.
Also Read: ஏவுகணை தொழிற்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது: DRDO தலைவர் சதீஷ் ரெட்டி
இந்த அக்னி-V ஏவுகணை குறித்து சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இது அமைதியை சீர்குலைக்கும் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும் 12,000 கிலோ மீட்டர் தாக்குதல் திறன் கொண்ட அக்னி-6 ஏவுகணையும் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Also Read: ஏவுகணை தாயாரிக்க பயன்படும் பொருட்களுடன் பாகிஸ்தான் நோக்கி சென்ற சீன கப்பல்.. மடக்கி பிடித்த இந்திய கடலோர காவல்படை..