ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆளில்லா ட்ரோன் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உயிரிழப்பு..

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) தலைநகர் அபுதாபியில் உள்ள அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் (ADNOC) சேமிப்பு கிடங்கு அருகே ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் 1 பாகிஸ்தானியர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கத்தினர் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஹவுதி இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்திய துதர் சுஞ்சய் சுதிர், இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததை உறுதி படுத்தியுள்ளார்.

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில். ஆளில்லா ட்ரோன் மூலம் முசாபா பகுதியில் உள்ள அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனியின் சேமிப்பு கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த எரிவாயு கிடங்கு அபுதாபியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மொத்தம் உள்ள 36 சேமிப்பு தொட்டியில் 3 தொட்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சேமிப்பு கிடங்கில் இருந்துதான் நாடுமுழுவதும் எரிபொருள் கொண்டு செல்லப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக ஹவுதி இராணுவ செய்தி தொடர்பாளர் யாஹியா சரே தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

Also Read: ஹமாஸுக்கு எதிராக கொலையாளி டால்பின்கள் மூலம் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்..

ஐக்கிய அரபு எமிரேடஸ் அமெரிக்காவுடன் இணைந்து ஏமனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபட்டு வருகிறது. தனது துருப்புகளை அமீரகம் குறைத்து இருந்தாலும் அமெரிக்காவுடன் இணைந்து தீவீரமாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன் ஜனவரி 3 ஆம் தேதி ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரவாபி கப்பல் கடத்தப்பட்டது.

கப்பலில் கடத்தப்பட்ட 11 பணியாளர்களில் 7 பேர் இந்தியர்கள். மேலும் அவர்கள் இன்னும் கிளர்ச்சியாளர்களின் காவலில் தான் உள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய துதர் இந்த பிரச்சனையை எழுப்பினார்.

Also Read: நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை.. பெண்கள், பள்ளிக்குழந்தைகள் கடத்தல்..

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு பயணம் செய்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுகிழமை துபாய் ஆட்சியாளர் ஷெக் முகமது பின் ரஷித் அல் மக்துமுடன் நடந்த சந்திப்பின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்கொரியா இடையே சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.