பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு மேலும் கடன் வழங்க சீனா ஒப்புதல்..?

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்பதற்காக சீனாவிடம் மேலும் உதவிகளை கோரியுள்ள நிலையில், இதனால் இந்தியா உடனான உறவில் பாதிப்பு இருக்காது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சீனாவின் கூடுதல் நிதி இந்தியா உடனான உறவை சிக்கலாக்கும் என்பதை நிராகரித்த விக்கிரமசிங்க, இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு நிதி உதவியுடன் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறது. மேலும் இலங்கைக்கு ஆதரவாக கடன் திட்டத்தை எளிதாக்க சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்தியா 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் வரிகள், பரிமாற்றங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளது. இருப்பினும் முன்னோக்கி செல்வதற்கு இந்தியாவின் ஆதரவு மட்டும் போதாது, மேலதிக நிதியுதவிக்கு ஜப்பான் மற்றும் சீனா உடனான உறவுகளை நம்பியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் நாங்கள் ஒரு சிறப்பு உறவை கொண்டுள்ளோம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க நாங்கள் எதையும் செய்யாத வரையில் நாங்கள் இணைந்து கொள்ளலாம். IMF உடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னரே சீனா மற்றும் மற்ற பிற தனியார் பத்திரதாரர்கள் உட்பட பிற கடன் வழங்குநர்களை இலங்கை அணுகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Also Read: பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா ரஷ்யா இடையே ஒப்புதல்..?

இலங்கையின் 3.5 பில்லியன் டாலர் கடனை மீளப் பேச்சுவார்த்தை நடத்தும் கோரிக்கையை நிராகரித்த சீனா, வேண்டுமென்றால் கூடுதல் கடன் உதவி வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியை பெறுவதற்கு, பொது செலவினங்களை குறைத்தல் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் போன்ற அரசியல் ரீதியான சீர்திருத்தங்கள் தேவைப்படலாம் என கூறினார்.

Also Read: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சீன நாணயத்தில் வர்த்தகம் செய்யும் பாகிஸ்தான்..?

இலங்கைக்கு வெளிநாட்டு கடனில் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன் உள்ளது. அதில் அதிகபட்சமான தனியார் பத்திரதாரர்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து பலதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உள்ளன. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் டாலர்களை கோரியுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also Read: 10 மாதங்களில் 14 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான்.. உலக வங்கி அறிக்கை..

Leave a Reply

Your email address will not be published.