இலங்கையை தொடர்ந்து நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடி.. எரிபொருளை மிச்சப்படுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு..

இலங்கையை தொடர்ந்து நேபாளத்திலும் அந்நிய செலாவணி நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை விண்ணை தொடும் நிலையில், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த மாதம் பொதுத்துறை அலுவலகங்களுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்க நேபாள அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் நடைபெற்று வருவதால் ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவை தவிர மற்ற பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான ஈரான் மற்றும் வெனிசுலாவும் கச்சா எண்ணையை விற்பனை செய்வதில் தடைகளை எதிர்கொண்டுள்ளன.

இதனால் கச்சா எண்ணெய் தட்டுபாடு நிலவி வருகிறது. கிடைக்கும் எண்ணெயும் விலை அதிகமாக உள்ளது. இதனால் நெருக்கடியை கட்டுப்படுத்தும் நோக்கில் நேபாள மத்திய வங்கி மற்றும் நேபாள எண்ணெய் கழகம் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அளிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியதாக நேபாள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா வருமானத்தை சார்ந்துள்ள நேபாளம், கோவிட் 19 தொற்றுநோயால் அந்நிய செலாவணி இருப்பில் சரிவை சந்தித்து வருகிறது. மானிய விலையில் எரிபொருளை விற்பனை செய்து வரும் நேபாள ஆயில் கார்ப்பரேஷன் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அரசு செய்தி தொடர்பாளர் ஞானேந்திர பகதூர் கார்க்கி கூறுகையில், முன்மொழிவு வந்துள்ளது, பரிசீலமையில் உள்ளது.

Also Read: சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் டாலர் கடன் பெற அமெரிக்கா செல்லும் இலங்கை குழு..?

ஆனால் இருவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். அந்திய செலாவணி நெருக்கடியை சமாளிக்க நேபாள அரசாங்கம், வெளிநாடுகளில் வசிக்கும் நேபாள நாட்டினரை, நாட்டில் உள்ள வங்கிகளில் டாலர் கணக்குகளை திறந்து முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read: கொரோனா பரவல்: இந்த நிதியாண்டு சீனாவின் வளர்ச்சி குறையும் என கணிப்பு..

நெருக்கடியை சமாளிக்க நேபாள அரசு விலையுயர்ந்த கார்கள், தங்கம் மற்றும் பிற ஆடம்பரமான பொருட்களின் இறக்குமதியை கடுமையாக்கியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் பிற பொருட்களின் மீதான வரியை குறைக்க முடியுமா என அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஞானேந்திர பகதூர் கார்க்கி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.