இலங்கையில் பொருளாதார நெருக்கடி.. வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி வலியுறுத்தல்..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மத்திய வங்கி வெள்ளியன்று வட்டி விகிதங்களை ஒரு சதவீத புள்ளிகளை உயர்த்தியது மற்றும் பொருளாதார சரிவை குறைக்க வரிகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் அந்நிய செலாவணி குறைந்து உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் தொழிற்துறை மூலப்பொருட்களின் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் ஜனவரியில் அதிகபட்சமாக 25 சதவீதத்தை எட்டிய நிலையில், ஒட்டுமொத்தமாக 16.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

டீசல் இல்லாததால் புதன்கிழமை முதல் பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் நாட்டில் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்காத ராஜபக்சே அரசை விமர்சித்த எரிசக்தி மற்றும் தொழிற்துறை அமைச்சர்களை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்தார்.

மற்றொரு அமைச்சரான வாசுதேவ் நாணயக்கார பதவீ நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு ஆதரவாக இனி அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லலை என தெரிவித்துள்ளார்.இலங்கை மத்திய வங்கியானது நிலையான வைப்பு மற்றும் கடன் விகிதங்களை தலா 6.5 மற்றும் 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்தவும், அரசின் வருவாயை உயர்த்த வரிகளை உயர்த்தவும் மத்திய வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு இலங்கை 7 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டிய நிலையில், 2.07 பில்லியன் டாலர் மட்டுமே கையிருப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.