தைவானில் அமைய உள்ள தூதரகம்.. ஐரோப்பா, லிதுவேனியாவுக்கு சீனா எச்சரிக்கை..
தைவான் தொடர்பான பிரச்சனையால் தற்போது சீனா மற்றும் லிதுவேனியா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் தைவான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என லிதுவேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சீனா எச்சரித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிதுவேனியாவில் செயல்பட்டு வரும் தனது தூதரகத்தை தைவான் பிரதிநிதி அலுவலகம் என அழைக்கும்மாறு லிதுவேனியாவுக்கு தைவான் கோரிக்கை விடுத்தது. அதனை அடுத்து ஐரோப்பிய நாடான லித்துவேனியா தைவான் தூரதகத்தை தைவான் பிரதிநிதி தூதரகம் என மாற்றியது.
தைவானை உரிமை கொண்டாடி வரும் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தைவான் தூதரகத்தை தைவானின் தலைநகரான சீன தைபே என அழைத்து வருகின்றன. இந்த நிலையில் தைவான் தூதரகத்தை முதல்முறையாக லிதுவேனியா தைவான் பிரதிநிதி அலுவலகம் என மாற்றியுள்ளது.
இதனால் சீனாவில் உள்ள லிதுவேனியா தூதரை உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு சீனா உத்தரவிட்டது. மேலும் லிதுவேனியாவில் உள்ள சீன தூதரையும் திரும்ப அழைக்க உள்ளதாகவும் லிதுவேனியாவை எச்சரித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன தயாரிப்புகளை ஆராய்ந்த போது சீனாவின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது.
Also Read: சீனாவுக்கு தடை.. இந்தியாவுக்கு அனுமதி.. இலங்கைக்கு கண்டனம் தெரிவித்த சீனா..
சீனாவின் ஷியாமி போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ‘திபெத்தை விடுவிப்போம்’ ‘சுதந்திர தைவான்’ போன்ற ஜனநாயக வார்த்தைகளை டைப் செய்யும் போது அதனை சென்சார் செய்து சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. எனவே லிதுவேனியா மக்கள் சீன மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம். அதனை தூக்கி எறியுங்கள் என லிதுவேனியா அரசு கூறியது.
Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனா லிதுவேனியாவை எச்சரித்தது. இந்த நிலையில் லிதுவேனியா தைவானில் தனது தூதரகத்தை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ஐரோப்பா மற்றும் லித்துவேனியாவை எச்சரித்துள்ளது. ஐரோப்பா சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதை ஐரோப்பிய நாடுகள் தடுக்க வேண்டும் என கூறியுள்ளது.
Also Read: பின்னடைவில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.. திட்டத்தை ரத்து செய்யும் நாடுகள்..