கார்கீவ் நகரைவிட்டு இன்று இரவுக்குள் இந்தியர்கள் வெளியேற தூதரகம் உத்தரவு..?
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால் இந்தியர்கள் அனைவரும் உக்ரைனின் கார்கீவ் நகரை விட்டு உடனே வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கார்கிவ் நகரில் இருக்கும் இந்தியர்களை இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்குள் அந்த நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. போர் தீவிரமடைந்துள்ளதால் உடனடியாக லெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆறு நாட்களாக ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று உணவு வாங்க சென்ற இந்தியர் ஒருவர் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தியர்கள் அனைவரையும் இந்தியா அழைத்துவர பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியர்களை மீட்டு வர “ஆப்ரேஷன் கங்கா” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் கிட்டதட்ட 10,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மீதம் உள்ளவர்களையும் விரைவாக அழைத்துவர மத்திய அமைச்சர்கள் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா, ரோமனியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைந்துள்ளனர்.
இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறி வரும் நிலையில், பாகிஸ்தான், துருக்கி, பங்களாதேஷ் போன்ற நாட்டினரும் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி தாங்களும் இந்தியர்கள் என கூறி கொண்டு, பேருந்தில் இந்திய கொடியுடன் தப்பி வருகின்றனர். மேலும் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்க நடவடிக்கை எடுக்காத நிலையில் மோடி அரசு துணிந்து இந்தியர்களை மீட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைநகருக்கு அருகே 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரஷ்யா இராணுவ ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை நிறுத்தியுள்ளதால், அதிபயங்கர தாங்குதல் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாததால் தாக்குதலை ரஷ்யா அதிகரித்துள்ளது. தலைநகர் கீவீல் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் எனவும் ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்குள் கார்கீவ் நகரைவிட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.