துருக்கியின் எதிரிகள் பாகிஸ்தானின் எதிரிகள்.. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், 3 நாள் பயணமாக உயர்மட்ட குழுவுடன் துருக்கி சென்றுள்ள நிலையில், துருக்கியின் எதிரிகள் பாகிஸ்தானின் எதிரிகள் என தெரிவித்துள்ளார்.

செவ்வாய் அன்று தனது அமைச்சர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் துருக்கி சென்றடைந்தார். அங்காரா எசன்போகா விமான நிலையம் வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் துருக்கி-பாகிஸ்தான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய ஷேபாஸ் ஷெரீப், துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய சகோதர உறவுகள் இருப்பதாகவும், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு என்றும் நிலைத்திருக்கும் என கூறினார். மேலும் துருக்கியின் எதிரிகள் பாகிஸ்தானின் எதிரிகள் என ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அதிபர் எர்டோகன் தலைமையில் துருக்கி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. துருக்கி தனது நண்பர்களை என்றும் மறக்காது. பூகம்பம், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களில் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவியுள்ளது. நமது உறவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Also Read: ரஷ்ய அதிபர் புதின் உயிரிழந்துவிட்டார்.? பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவர் அதிர்ச்சி தகவல்

மேலும், துரதிர்ஷ்டவசமாக எங்கள் உறவுகள் இருதரப்பு வர்த்தகத்தை பிரதிபலிக்கவில்லை. பரஸ்பர முதலீட்டை ஊக்குவிக்க பாகிஸ்தானும் துருக்கியும் அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். கடந்த கால தவறுகளில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம் என ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியா சுதந்திரமாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம்: இம்ரான்கான்

எரிசக்தி துறையில் துருக்கி முதலீட்டாளர்களை பாகிஸ்தான் வரவேற்கும். பாகிஸ்தானில் முதலீடு செய்ய துருக்கி முதலீட்டாளர்களை நான் அழைக்கிறேன். துருக்கி முதலீட்டாளர்களின் இரண்டாவது தாயகம் பாகிஸ்தான் எனவும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், இருநாட்டுக்கு இடையேயான தற்போதைய வர்த்தக அளவு போதுமானதாக இல்லை என ஷேபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

Also Read: ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்.. சீனாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.