சீனாவின் சியோமி நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..?

சீனாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் 5,551.27 கோடி ரூபாயை அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சியோமி நிறுவனம் நாட்டில் மொபைல் போன் வர்த்தகராகவும், விநியோகிப்பவராகவும் இருக்கும் சியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சியோமி இந்தியா நிறுவனம் சீனாவை தளமாக கொண்ட சியோமி குழுமத்தின் துணை நிறுவனமாகும். இது MI என்ற பெயரில் இந்தியாவில் மொபைல் போன்களை அறிமுகம் செய்கிறது. சியோமி நிறுவனம் 2014 ல் இந்தியாவில் தனது நடவடிக்கையை தொடங்கியது மற்றும் 2015 ஆம் ஆண்டு முதல் பணத்தை அனுப்ப தொடங்கியது.

சியோமி இந்தியா நிறுவனம் 5,551.27 கோடிக்கு சமமான வெளிநாட்டு நாணயத்தை ராயல்டி என்ற பெயரில் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. சியோமி குழுமத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: இலங்கைக்கு 600 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்..?

மூன்று நிறுவனங்களில் சியோமி குழுமத்திற்கும் மற்ற இரண்டு நிறுவனங்கள் அமெரிக்காவை தளமாக கொண்டவை ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சியோமி நிறுவனத்துடன் தொடர்பில்லாதவை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்களை சியோமி வாங்குவதாக தெரிவிக்கப்பட்டாலும், அத்தகைய தொகைகள் மாற்றப்படும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து எந்த சேவையையும் சியோமி பெறவில்லை.

Also Read: மென்பொருள் சேவை துறையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என அறிக்கை..!

ஆனால் அதற்கு ஈடான வெளிநாட்டு தொகை ராயல்டி என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சியோமி இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பும் போது வங்கிகளுக்கு தவறான தகவல்களை அளித்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.