ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் எஞ்சின் தயாரிப்பு.. பிரான்ஸ் நிறுவனத்துடன் இணையும் DRDO..

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானத்திற்கான (AMCA) 125kn இஞ்சினை தயாரிப்பிற்காக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), பிரெஞ்சு நிறுவனமான சஃப்ரானுடன் கூட்டு சேர உள்ளது.

பாதுகாப்பு வட்டார தகவலின்படி, DRDO முற்றும் சஃப்ரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஃப்ரான் நிறுவனம் ஏற்கனவே மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) துருவ்வின் இஞ்சின் தயாரிப்பிலும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் சஃப்ரான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ALH மற்றும் பல்வேறு மாறுபாடுகளை கூட்டாக உருவாக்கி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வந்தபோதும், சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் சென்றபோதும் AMCA எஞ்சின் தொடர்பான ஓத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏரோ இந்தியா 2021 நிகழ்ச்சியின் போதே, வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து AMCA போர் விமானத்திற்கான இஞ்சின் தயாரிப்பு பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார். ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் எஜென்சி (ADA) அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் இணைந்து LCA-Mk-2 தொடர்பாக வேலை பார்த்து வருகின்றன.

இதுதவிர் AMCA மற்றும் இந்திய கடற்படைக்கான இரட்டை இயந்திர தளம் சார்ந்த போர் விமானம் (TEBDF) ஆகியவற்றிலும் பணியாற்றி வருகின்றன. பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதியான உடன் AMCA போர் விமானத்திற்கான இஞ்சின் தயாரிக்கும் பணி நடைபெறும் என கூறப்படுள்ளது.

AMCA வின் முன்மாதிரியை உருவாக்குவதற்கு 15,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த போர் விமானம் 2025-26 ஆம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்விங் ரோல் ஐந்தாம் தலைமுறை போர் விமானமானது (AMCA) மேம்பட்ட திருட்டுதனமான அம்சங்களை கொண்டிருக்கும். மேலும் சூப்பர் க்ரூஸ் திறனையும் கொண்டிருக்கும்.

ஏனெனில் இது ஆஃப்டர் பர்னர்களை பயன்படுத்தாமல் சூப்பர்சோனிக் வேகத்தை பெறவும், டேட்டா ஃப்யூஷன் மற்றும் ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன் செய்யப்பட்ட அரே ரேடார்களுடன் மல்டி-சென்சார் ஒருங்கிணைப்பாகவும் உதவும். இந்த போர் விமானம் 25 டன் எடை கொண்டதாகவும், உள்புற பேலோட் 1,500 கிலோ மற்றும் வெளிப்புற பேலோட் 5,500 கிலோவும், எரிப்பொருள் 6,500 கிலோவும் கொண்டிருக்கும்.

AMCA போர் விமானமானது திருட்டுத்தனமான மற்றும் திருட்டுத்தனம் அல்லாத என இரண்டு கட்டமைப்புகளில் உருவாக்கப்படுகிறது. AMCA Mk1-ல் GE414 இஞ்சினுடன் மற்றும் AMCA Mk2-வானது பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒரு மேம்பட்ட அதி சக்தி வாய்ந்த எஞ்சினை கூட்டாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.