ரஷ்ய எண்ணெய்க்கு ஐரோப்பா தடை.. இறக்குமதி செய்யும் அமெரிக்கா..?

அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு ரஷ்யா தான் காரணம் என குற்றம் சாட்டிய அதிபர் ஜோ பிடன், அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கலாம் என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் புதன் கிழமை கூறுகையில், பணவீக்க பிரச்சனையை தீர்க்க கடினமாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா எண்ணெய் வாங்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் தடை செய்வதன் மூலம் ரஷ்யா அதன் எரிசக்தி விலைகளை குறைக்க கட்டாயப்படுத்தும், அது அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என பிடன் தெரிவித்துள்ளார். எண்ணெய் வாங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவை குறைந்த விலையில் விற்கப்பட வேண்டும் என பிடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் எண்ணெய் வாங்குவதை நிறுத்த உள்ளதாக ஐரோப்பா அறிவித்துள்ளது. ஐரோப்பா நிறுத்திய உடன் எண்ணெய் விலை வேகமாக குறையும். அப்போது அந்த எண்ணெயை அமெரிக்கா வாங்கி ஐரோப்பாவிற்கு விற்று லாபம் பார்க்கும் என சர்வதேச வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே குறைந்த அளவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வரும் அமெரிக்கா, தடை விதித்த பிறகு அதிக அளவில் இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது.

Also Read: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை அழிக்க சீனா உருவாக்கி வரும் ஆயுதம்..?

ஆனால் சில ஐரோப்பிய நாடுகள் கப்பல் மூலம் வாங்கப்படும் எண்ணெய்க்கு மட்டும் தடை விதிக்க வேண்டும் என்றும், குழாய் மூலம் வாங்கப்படும் எண்ணெய்க்கு தடை விதிக்க கூடாது என தெரிவித்துள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகள் குழாய் வழியாக எண்ணெயை இறக்குமதி செய்ய ஆராய்ந்து வருகின்றனர்.

Also Read: ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்.. சீனாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்..

தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியா அதனை சுத்திகரித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றன. இதனை இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் பலியாகிவிட்டதாக பரவலாக கூறப்படுகிறது.

Also Read: ரஷ்ய அதிபர் புதின் உயிரிழந்துவிட்டார்.? பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவர் அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published.