சீனா மீது பொருளாதார தடை விதித்துள்ள ஐரோப்பிய யூனியன்.. அதிர்ச்சியில் சீனா..

மனித உரிமை மீறலுக்காக ஐரோப்பிய யூனியன் சீனா, ரஷ்யா மற்றும் மியான்மர் மீது பொருளாதார தடைகளை விதிக்க உள்ளது.

ஜின்ஜியாங் மகாணத்கில் உய்கூர் முஸ்லிம்களை கொடுமை படுத்தியதற்காகவும், ஹாங்காங் மக்கள் மீது மனித உரிமை மீறலுக்காகவும், சீனாவின் நான்கு அதிகாரிகள் மற்றும் ஒரு சீன நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. மேலும் சீனா, ரஷ்யா மற்றும் மியான்மர் மீது பொருளாதார தடைக்கு ஐரோப்பிய வெளியுறவு செயலாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

ரஷ்யாவில் எதிர்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்ததற்கும், அவர் ரஷ்யா திரும்பிய உடன் அவரை கைது செய்ததற்கும், மேலும் செச்சென்யாவில் மனித உரிமை மீறலுக்காகவும் நான்கு ரஷ்ய அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட உள்ளது.

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றி ஆன் சாங் சூகியை கைது செய்து, போராடும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மனித உரிமை அத்துமீறலில் ஈடுபட்டதற்காக மியான்மர் ராணுவம் மற்றும் ராணுவம் தொடர்பான வணிக நிறுவனங்களுக்கு பொருளாதார தடை மற்றும் கருப்பு பட்டியலில் வைக்கப்பட உள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

உலக அளவில் மனித அத்துமீறலில் ஈடுபடுவோரை குறிவைத்து ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும் இந்த பொருளாதார தடைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அரசு இதழில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *