உ.பியில் அமைச்சர்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்.. வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு.. 3 கார்களுக்கு தீ வைப்பு..

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியின் டிகுனியா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது கார் மோதியதில் இரண்டு விவசாயிகள் பலியாகினார்.

லக்கிம்பூர் கெரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உத்திரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா டிகுனியா கிராமத்திற்கு வந்தடைந்தார். விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரிப்பு தெரிவித்து துணை முதல்வருக்கு கருப்பு கொடி காட்டினர்.

அப்போது டிகுனியாவிற்கு காரில் வந்தார் இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா. அப்போது அவரது காரின் முன்பாக விவசாயிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஷீஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இரண்டு விவசாயிகள் இறந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் மூன்று கார்களை அடித்து நொறுக்கி காருக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கலவரம் வெடித்துள்ளது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உதவி இயக்குனர் பிரசாந்குமாரை தொடர்பு கொண்டு லக்கிம்பூர் கேரியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு போலிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மற்ற போலிஸ் அதிகாரிகளும் அனுப்பப்படுவார்கள் என டிஜிபி கூறியுள்ளார்.இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: CAA வன்முறையின் போது கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம்க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு..

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது மிகவும் மனிதாபிமானமற்ற கொடுமையான செயல் என பாஜகவை சாடியுள்ளார். விவசாயிகள் கார்களை எரித்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் ஹிட்ல போன்று பாஜக விவசாயிகளை ஒடுக்குவதாக கூறியுள்ளது.

Also Read: இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணனுடன் கைது செய்யப்பட்ட 2 மாலத்தீவு பெண்கள் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை..

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா சதி செய்வதாக ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி குற்றம் சாட்டி உள்ளார். உபி ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் CBI விசாரணை வேண்டும் என கூறியுள்ளார். பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: குஜராத் அருகே பிடிபட்ட 3,000 கிலோ போதைப்பொருள்..? தாலிபான்களுக்கு தொடர்பு..

Leave a Reply

Your email address will not be published.