இந்துக்களை படுகொலையை செய்த 70 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது பரூக் அப்துல்லா, ராஜீவ் காந்தி அரசு..?

கடந்த 1989 ஆம் ஆண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கமே நாட்டில் பயங்கரவாதம் பெருகியதற்கு காரணம் என ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஷேஷ் பால் வைத் குற்றம் சாட்டியுள்ளார்.

ஷேஷ் பால் வைத் டிவிட்டரில் கூறுகையில், ISI பயிற்சி பெற்ற 70 பயங்கரவாதிகளின் முதல் குழு ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் என்பது நாட்டில் பலருக்கு தெரியாது. பரூக் அப்துல்லா தலைமையிலான அப்போதைய ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் தவறான அரசியல் முடிவால் அந்த பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1987 முதல் 1990 வரை பரூக் அப்துல்லா இருந்தார். அப்போது தான் காஷ்மீரில் இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 1989ல் மத்தியில் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு இருந்தது. மத்திய அரசுக்கு தெரியாமல் இது சாத்தியமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட சில பயங்கரவாதிகளின் பெயரையும் ஷேஷ் பால் வைத் குறிப்பிட்டுள்ளார். த்ரேகாமின் முகமது அப்சல் ஷேக், ரபீக் அகமது அஹங்கர், முகமது அயூப் நஜார், ஃபருக் அகமது கனாய், குலாம் முகமது குஜ்ரி, ஃபரூக் அகமது மாலிக், நசீர் அகமது ஷேக் மற்றும் குலாம் டி உதுலி ஆகியோர் பெயரை டிஜிபி வெளியிட்டுள்ளார்.

பாஜக தகவல் மற்றும் தொழிற்நுட்ப துறையின் தேசிய பொறுப்பாளருமான அமித் மாளவியா, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உண்மைக்கு புறம்பானது என்று கூறியதற்காக உமர் அப்துல்லாவை கடுமையாக கண்டித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், ஜனவரி 18, 1990 அன்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பரூக் அப்துல்லா, ISI பயிற்சி பெற்ற 70 பயங்கரவாதிகளை விடுவிக்க உத்தரவிட்டார் என்பதை ஓமருக்கு நினைவு படுத்துவதாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மாளவியா உமர் அப்துல்லாவின் டிவிட்டை கண்டித்து தனது டிவிட்டர் பதிவில், உமர் காஷ்மீர் கோப்புகளில் எந்த பகுதியை உண்மையற்றதாக காண்கிறார்? ஜனவரி 18, 1990 அன்று உமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜனவரி 19, 1990 முதல் காஷ்மீர் இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துப்பட்டது.

ISI பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை விடுவிக்க அவர் உத்தரவிட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ல் ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமித்ததாகவும், ஜூலை 1989 ல் ராஜினாமா செய்வதற்கு முன்பு பயங்கரவாதிகள் குறித்து ராஜீவ் காந்தியை எச்சரித்ததாகவும் அமித் மாளவிகா தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு லோக்சபா தேர்தலில் போட்டியிட ஜக்மோகனுக்கு ராஜீவ் காந்தி சீட் வழங்கினார். ஆனால் அதனை அவர் நிராகரித்தார். பின்னர் மீண்டும் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக ஜனவரி 20, 1990 அன்று ஜக்மோகன் நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 18, 1990 அன்று பரூக் அப்துல்லா ராஜினாமா செய்த பிறகு, ஜக்மோகன் ஜனவரி 22, 1990 அன்று ஶ்ரீநகரை அடைந்தார். அதற்குள் ஜனவரி 19, 1990 அன்றே பயங்கரவாதிகள் இனப்படுகொலையை நிகழ்த்தி ஜம்மு காஷ்மீரை கைப்பற்றிவிட்டனர் என கூறியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் கூறியுள்ளப்படி, படுகொலை நிகழ்த்தப்பட்ட அதிகாலை மசூதியில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் அல்லது மதம் மாறுங்கள் அல்லது உயிரை விடுங்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் இந்து ஆண்கள் வேண்டாம், காஷ்மீர் இந்து பெண்கள் வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக படத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.