குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

ஆப்கானிஸ்தானில் தனது 9 வயது மகளை 55 வயது நபருக்கு விற்பனை செய்த தந்தையின் செயல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல பெண்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறிய பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றி தாலிபான்கள் ஆட்சி அமைத்தனர். ஆனால் தாலிபான் ஆட்சியை பாகிஸ்தான், சீனாவை தலிர இன்னும் எந்த நாடும் ஆதரிக்காததால் அவர்களுக்கு நிதி உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐநாவால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் பட்டியலில் பல தாலிபான்கள் உள்ளனர். இதனால் எந்த நாடும் தாலிபான் அரசை ஆதரிக்கவில்லை. தற்போது ஆப்கனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று, ஆப்கன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார தடை, உற்பத்தியின்மை, வறட்சி என மக்கள் வாழ முடியாத இடமாக ஆப்கன் மாறிவிட்டது.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் உயிர் வாழ்வதற்கு ஆப்கன் மக்கள் சிறுமிகளையும், இளம்பெண்களையும் விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் மகள்களை பணத்திற்காக வயது அதிகம் உள்ள ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

ஆப்கனின் பாட்ஷிஸ் மகாணத்தில் பர்வானா மாலிக் என்ற 9 வயது சிறுமியை 55 வயதான கோர்பன் என்பவனுக்கு கடந்த மாதம் விற்பனை செய்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. தற்போது பர்வானா குடும்பம் உள்நாட்டில் இடம்பெயந்தோருக்கான முகாமில் தங்கியுள்ளனர்.

பர்வானா குடும்பத்தில் மொத்தம் எட்டு பேர். வெளிநாடுகளில் இருந்து வரும் உதவி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஒருவேளை உணவு கிடைப்பதே சவாலாக உள்ளது. வேலை இல்லாததால் உணவின்றி பல நாட்களாக தவித்து வருகின்றனர். இதனால் உயிர் பிழைக்க பர்வானாவின் தந்தை அப்துல் மாலிக் சில மாதங்களுக்கு முன்பு தனது 12 வயது மகளை விற்றுவிட்டதாக அப்துல் மாலிக் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

தற்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் உயிர் பிழைக்க தனது மற்றொரு 9 வயது மகளான பர்வானாவையும் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மாலிக் கூறுகிறார். இந்த முடிவு தனக்கு குற்ற உணர்வு, அவமானம் மற்றும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தனது மகள் பர்வானா படித்து ஆசிரியராக வர நினைத்ததாக மாலிக் கூறினார். சிறுமியை விற்பனை செய்யப்பட்ட நபரான கோர்பன், மாலிக் வீட்டிற்கு வந்து 2,200 டாலர் மதிப்பிலான செம்மறி ஆடுகள், பணம் மற்றும் நிலங்களை கொடுத்துவிட்டு சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

Also Read: உய்கூர் முஸ்லிம்களின் உடல் உறுப்புகளை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் சீனா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..

கோர்பன் தன்னை வேலை செய்ய சொல்லி அடித்து கொடுமை படுத்துவார் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி பர்வானா பயந்ததாக அப்துல் கூறினார். மகளை அழைத்து செல்லும் போது இவள் உங்கள் மணமகள், அவளை நன்றாக கவனித்து கொள்ளுங்கள், அடிக்காதீர்கள் என கண்ணீருடன் தந்தை அப்துல் கோர்வனிடம் கூறியுள்ளார்.

இதே போல் அண்டை மாநிலமான கோர் மகாணத்திலும், 10 வயதுடைய மகுல் என்ற சிறுமியை அவர்கள் குடும்பம் கடன் பட்டிருக்கும் 70 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி எனக்கு அவருடன் போக விருப்பமில்லை, என்னை போக கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி சிறுமி அழுததாக அந்த சிறுமி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

மகுல் மற்றும் பர்வானா போன்று ஆப்கனில் பல சிறுமிகளின் வாழ்க்கை தற்போது கேள்விகுறியாகி உள்ளது. சிறுமிகளை விற்பனை செய்து வரும் பணம் அதிகமாக இருந்தாலும் தற்போது விற்கும் விலைவாசிக்கு அவைகள் சில நாட்களுக்கு போதுமானதாகவே உள்ளதாக கூறப்படுகிறது. தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கு படிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் திருமணத்தை நோக்கி தள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Also Read: ஷியா முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் குறி வைக்கப்படுவீர்கள்: ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published.