சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு..

மேகாலயா, மிசோரம், அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து மாநிலங்கள் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களை குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய புலனாய்வு அமைப்பிடம் மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் போலி ஆவணங்கள் பயன்படுத்தி இந்தியாவிற்குள் இருப்பவர்களையும் கண்டறியுமாறு மத்திய அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை குடியமர்த்தும் கும்பல் பெங்களூரை மையமாக வைத்து செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கும்பல் ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் கொண்டுவருவது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு இந்தியா முழுவதும் செல்ல போக்குவரத்தையும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். இதனால் அவர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று குடியேறுவதாக மத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிரோத குடியேற்ற பின்னணியில் ஜம்முவை சேர்ந்த சஹாலம் லஷ்கர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ராஜூ அலி மற்றும் பெங்களூரை சேர்ந்த கும்கும் அகமது சவுத்ரி ஆகியோர் செயல்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மேற்குவங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 37 வங்கதேசத்தினரை போலிசார் கைது செய்தனர்.

Also Read: இந்தியாவில் 5 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பிறகு 21 பங்களாதேஷிகள் சொந்த ஊர் திரும்பினர்..

உள்த்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு முகமைக்கு அனுப்பிய செய்தியில், இவற்றில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும், மக்கள் தொகை விகிதம் மற்றும் சூழ்நிலையை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குடியேறும் இவர்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 37 வங்கதேசத்தினரை கைது செய்த உ.பி. போலிசார்..

2017ல் நாட்டில் சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில ரோஹிங்கியாக்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், நிதி திரட்டுதல், ஆள் கடத்தல், போலி ஆவணங்களை தயாரித்தல் போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Also Read: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது..?

Leave a Reply

Your email address will not be published.