போர் இனிமேல்தான் ஆரம்பம்.. தாலிபானை எச்சரித்த ISIS-K பயங்கரவாத அமைப்பு..

ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-கோராசன் (ISIS-K), ஜின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்களை சீனா இனப்படுகொலை செய்து வரும் நிலையில், சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் தாலிபானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ISIS-K அமைப்பின் “வாய்ஸ் ஆஃப் குராசான்” என்ற பத்திரிக்கையில் ISI தலைவருடன் தாலிபான் உறுப்பினர்கள் பிரார்த்தனை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. மேலும் தாலிபான்களின் எராளமான பயிற்சி முகாம்கள் மற்றும் மதப்பள்ளிகள் பாகிஸ்தானில் உள்ளதாகவும் ISIS-K கூறியுள்ளது.

சீனா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் தாலிபான்கள் நடத்திய சந்திப்புகள் மற்றும் அவர்களின் வருகைகளை ISIS-K பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரிகள் என தெரிவித்துள்ளது.

உய்கூர் முஸ்லிம்களை ஒழிப்பதை சீனாவின் உள்விவகாரமாக தாலிபான் கருதுவதாக ISIS-K குற்றம் சாட்டியுள்ளது. தாலிபானின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய ISIS-K, தீவிர தேசியவாத மற்றும் பழங்குடிவாதத்திற்கும் தாலிபான் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சியை கைப்பற்றி நிலையில் சர்வதேச நாடுகளின் கோரிக்கையின்படி, அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் அதனை தாலிபான் நிறைவேற்றவில்லை. சன்னி, பஷ்டுன் குழு தனது அமைச்சரவையை செப்டம்பரில் விரிவுபடுத்தியது.

ஆனால் அதில் ஹசராஸ் மற்றும் உஸ்பெக்ஸ் போன்ற சிறுபான்மை சமூகங்களுக்க முக்கியமான இலாக்காக்கள் வழங்கப்படவில்லை. இன்றும் கூட பஷ்டூன்கள், உஸ்பெக்ஸ் மற்றும் துர்க்மென் ஆகியோருக்கு இடையே கடுமையான வெறுப்பு இருப்பதால் பெரிய உட்கட்சி மோதல்கள் இருப்பதாக ISIS-K தனது பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2020ல் தோஹாவில் தாலிபானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நிராகரித்த ISIS-K, முஜாஹிதீன்களுக்கு போரில் இணைய அழைப்பு விடுத்துள்ளது. உண்மையான போர் இப்போதுதான் தொடங்கி உள்ளது. அல்லாவின் இராணுவம் மீண்டும் எழுகிறது.

அல்லாவின் நிலங்களை அவனது சட்டத்தின் மூலம் ஆள வேண்டும். அல்லாவின் விருப்பத்தால் நாங்கள் முன்னெப்போதையும் விட வலுவாக திரும்பி வருகிறோம். எங்கள் உன்னத தலைவர்களின் வார்த்தைகள் உங்களை என்றென்றும் வேட்டையாடும். இப்போது சண்டை ஆரம்பமாகிவிட்டது என ISIS-K பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.