காலிஸ்தானுக்கு நிதி உதவி.. கனடா சென்ற தேசிய புலனாய்வு அமைப்பு..

நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) போன்ற காலிஸ்தான் அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில், இந்தியாவில் உள்ள NGO அமைப்புகளுக்கு பிரிவினைவாதிகள் நிதி உதவி அளித்தது தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெள்ளி அன்று கனடா நாட்டிற்கு சென்றது.

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மிகப்பெரிய கட்டமைப்புடன் உள்ளது. பல ஆண்டுகளாகவே காலிஸ்தான் தான் தலைவர்கள் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு காலிஸ்தான் தின விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கலந்து கொண்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்தியா இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. மேலும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றுபவர்களுக்கு 2.5 லட்சம் டாலர் பரிசு தொகையை அறிவித்து இருந்தது காலிஸ்தான் SFJ இயக்கம்.

இந்த நிலையில் தான் நிதி உதவி அளிக்கும் பிரிவினைவாத அமைப்புகளை கண்டுபிடிக்க NIA கனடா நாட்டிற்கு சென்றுள்ளது. இந்த NIA குழுவில் ஒரு ஐஜி உட்பட மூன்று பேர் உள்ளனர்.

நான்கு நாட்கள் பயணமாக கனடா சென்றுள்ளனர். NIA கண்காணிப்பில் SFJ மட்டும் இல்லாமல் பாபர் கால்சா இன்டர்நேஷ்னல், காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் மற்றும் காலிஸ்தான் சிந்தாபாத் ஃபோர்ஸ் ஆகியவை கண்காணிப்பு வளையத்தில் உள்ளன.

Also Read: உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..

கனடா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் நிதி தொடர்பான வழிகளும் ஆராயப்படும் என NIA தெரிவித்துள்ளது. NIA நேரடியாக வெளிநாட்டிற்கு சென்று விசாரணை நடத்துவது இங்குள்ள பிரிவினைவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.