நேட்டோவில் இணைய உள்ள பின்லாந்து.. சைமா பிரச்சனையை தூசி தட்டிய ரஷ்யா..

பின்லாந்து தற்போது நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளதால் ரஷ்யா அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சைமா கால்வாய் ஒப்பந்தத்தை தூசி தட்டியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய ஆலண்ட் தீவுகள் பற்றிய பிரச்சனையும் ரஷ்யா முன்னிலை படுத்துகிறது.

திங்கள் அன்று ஐரோப்பிய யூனியனுக்கான ரஷ்ய தூதர் விளாடிமிர் சிசோவ், நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் நடவடிக்கை, ரஷ்யா மற்றும் பின்லாந்து இடையே ஒரு பிரதேச பிரச்சனையை தூண்டும் என தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதர் கூறுகையில், நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் முயற்சி குறித்து எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளது.

ஒன்று சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் இராணுவமயமாக்கப்பட்ட அந்தஸ்தை கொண்ட ஆலண்ட் திவுகளின் நிலை மற்றும் சைமா கால்வாயின் ஒப்பந்தம். சைமா கால்வாய் என்பது ரஷ்யாவின் வைபோர்க் அருகே பின்லாந்து வளைகுடாவுடன் சைமா ஏரியை இணைக்கும் ஒரு போக்குவரத்து கால்வாய் ஆகும். இது அன்றைய சோவியத் யூனியனால் கட்டப்பட்டது.

சைமா கால்வாயை சுற்றியுள்ள பகுதிகளின் மீது பின்லாந்துக்கு உண்மையில் உரிமைகள் இல்லை. சமாதான ஒப்பந்தத்தின் படியே அந்த பகுதியை பின்லாந்து அரசுக்கு ரஷ்யா குத்தகைக்கு வழங்கியதை நினைவு கூறுவதாக ரஷ்ய தூதர் தெரிவித்தார். இரண்டாம் உலக போர் வரை சைமா கால்வாய் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் பின்லாந்து வசம் இருந்த நிலையில், 1944 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சைமா கால்வாய் தெற்கு பகுதியை கைப்பற்றியது.

Also Read: உக்ரைன் ரஷ்யா மோதல்.. நார்ட் ஸ்ட்ரீம் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு..?

இதனால் பின்லாந்து நகரங்களுக்கு இடையேயான சைமா கால்வாய் வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் 1963 ல் பின்லாந்து மற்றும் சோவியத் யூனியன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் கீழ் சோவியத் யூனியனின் கால்வாய் பகுதியை பின்லாந்து 50 ஆண்டுகள் குத்தகைக்கு 1963 ல் எடுத்தது.

Also Read: சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானை தாக்குவதற்கு சமம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

2013 ல் 50 ஆண்டு குத்தகை முடிந்த நிலையில் மீண்டும் 50 ஆண்டு குத்தகைக்கு 2063 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது பின்லாந்து நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்ததால் ஒப்பந்தத்தை ரஷ்யா ரத்து செய்துள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய ஆலண்ட் தீவுகளை பின்லாந்து உரிமை கோருகிறது. ஆனால் ஆலண்ட் மக்கள் தன்னாட்சி அல்லது தனிநாடு என கூறி வருகின்றனர். இதனால் ரஷ்யாவால் ஆலண்ட் தீவில் பின்லாந்துக்கு எதிராக கலவரத்தை தூண்ட முடியும் என சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Also Read: சாலமன் தீவை தொடர்ந்து மற்றொரு பசுபிக் நாட்டுடன் சீனா பாதுகாப்பு ஒப்பந்தம்..?

Leave a Reply

Your email address will not be published.