கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக இஸ்லாமிய மதகுரு வசீம் அல் மீது FIR பதிவு..

கொச்சி போலிசார் புதன்கிழமை அன்று இஸ்லாமிய மதகுரு வசீம் அல் ஹிகாமி மீது கிறிஸ்துவ சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாஜக தலைவர் கொடுத்த புகாரின் பேரில் FIR பதிவு செய்துள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் இஸ்லாமிய மதகுரு வசீம் அல் ஹிகாமி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யூடியூப்பில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இழிவான கருத்துக்களை கூறி வீடியோ பதிவேற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அனூப் அந்தோனி இஸ்லாமிய மதகுருவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அனூப் அந்தோனி தனது புகாரில், இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு எதிராக வசீம் அல் ஹிகாமி கண்ணியமற்ற கருத்துக்களை தெரிவித்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஏசு கிறிஸ்துவை இழிவுபடுத்துதல் மற்றும் கிறிஸ்துவர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக வசீம் அல் ஹிகாமி மீது பலர் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாஜக தலைவர் அனூப் அந்தோனி கூறுகையில், மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாக புகார் அளித்துவிட்டு, எர்ணாகுளம் சைபர் க்ரைம் காவல்துறையிலும் புகார் அளித்தேன், ஆனால் அவர்கள் மீது புகார் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை அணுகினேன்.

இந்த வழக்கை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாநில காவல்துறை FIR பதிவு செய்தது என பாஜக தலைவர் அனூப் அந்தோனி கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் தண்டனை கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்திய தண்டனை சட்டம், 153 ஏ (வெவ்வேறு மத குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்), மற்றும் 505 (பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் இஸ்லாமிய மதகுரு வசீம் அல் ஹிகாமி மீது கொச்சி போலிசார் FIR பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.