நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருபவருக்கு தனது வீட்டை தருவதாக கூறிய சல்மான் மீது FIR பதிவு..

நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு தனது வீட்டை அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்த அஜ்மீர் தர்கா காதிம் சல்மான் சிஷ்திக்கு எதிராக அஜ்மிர் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சனிக்கிழமை அன்று சிஷ்தி வெளியிட்ட வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு தனது வீட்டை ஒப்படைப்பதாக கூறி உள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து அஜ்மிர் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சல்மான் சிஷ்தி மீது கொலை முயற்சி உட்பட 13 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிஷ்தி தனது வீடியோவில், நான் என் பெரியவர்கள் மீது சத்தியம் செய்கிறேன், என் அம்மா மீது சத்தியம் செய்கிறேன், நான் அவளை வெளிப்படையாக சுடுவேன். நுபுர் சர்மாவின் தலையை யார் கொண்டு வருகிறாரோ, அவருக்கு எனது வீட்டை கொடுப்பேன் என்று என் குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறேன் என கூறியுள்ளார்.

நுபுர் சர்மாவின் முகமது நபிகள் தொடர்பான கருத்துக்கு இஸ்லாமியர்கள் இடையே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பல இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நுபுர் சர்மாவிற்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பதிவிட்ட கன்ஹையா லால் என் இந்து தையல் தொழிலாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவலின் படி, ஜூன் 17 அன்று மௌன ஊர்வலத்தின்போது அஜ்மீர் தர்காவிற்கு வெளியே அஜ்மிர் தர்காவை சேர்ந்த காதிம் சல்மான் சிஷ்தியால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அஜ்மிர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான், இந்திய தண்டனை சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.