எல்லை தொடர்பாக பாகிஸ்தான் தாலிபான் இடையே துப்பாக்கிச்சூடு.. பீரங்கி தாக்குதலால் பரபரப்பு..

தாலிபானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மற்றொரு எல்லை தொடர்பாக மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் துப்பாக்கிச்சூடு மற்றும் பாகிஸ்தான் கனரக பீரங்கி கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் தாலிபான்கள் அங்கு முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பரிலும் இதே போன்று எல்லை தொடர்பாக குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் மற்றும் தாலிபான்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லையில் வேலி அமைக்க முயன்ற போது அதனை அகற்றி தாலிபான்கள் எடுத்து சென்றுவிட்டனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று எல்லை தொடர்பாக மீண்டும் குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தாலிபான்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 2,640 கிலோமீட்டர் தூரம் எல்லை உள்ளது.

ஆப்கானிஸ்தானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் முல்லா முஹம்மது யாகூப் முஜாஹித் கூறுகையில், தாலிபான்கள் தற்போது 1,10,000 வீரர்களை கொண்ட இராணுவத்தை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து இந்த இராணுவம் உருவாக்கப்பட்டு வருவதாக முல்லா தெரிவித்துள்ளார்.

இதில் 10,000 பேர் ஏற்கனவே படையில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 80,000 வீரர்கள் பயிற்சியில் இருப்பதாக முல்லா தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4,000 ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்களை மீண்டும் இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை பதட்டங்கள் பாதுகாப்பு நிலைமையை சீர்குலைக்கும் வகையில் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் ஆப்கானிஸ்தானுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முல்லா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.