ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம்..

இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சூரன்கோட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து இராணுவத்தினர் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் இந்திய தரப்பில் ஒரு ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.

5 வீரர்கள் மற்றும் காயமடைந்த மற்ற வீரர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் இராணுவத்தினர் சேர்த்தனர். இதில் பலத்த காயமடைந்த 5 வீரர்கள் உயிரிழந்ததாக இராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பந்திப்போரா மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கொல்லப்பட்டான்.

Also Read: காஷ்மீர் பண்டிட் படுகொலை எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை..

கொல்லப்பட்ட பயங்கரவாதி தடைசெய்யப்பட்ட TRF தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவன் என தெரியவந்துள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இவனுக்கும் தொடர்பு இருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Also Read: தமிழகத்தின் மதுரையில் ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தது NIA.. பாய்ந்தது UAPA..

கட்டுப்பாடு கோடு (LOC) உள்ள சாம்ரர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூரன்கோட்டில் சுற்றிவளைக்கப்பட்ட பயய்கரவாதிகளுக்கும் இராணுவதினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

Also Read: அருணாச்சல் எல்லையில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல்..

Leave a Reply

Your email address will not be published.