ஐநாவில் இந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா உட்பட 5 நாடுகள் நிராகரித்தன..

இந்தியாவை சேர்ந்த கோபிந்த பட்நாயக் துக்கிவலசாவை ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கும் பாகிஸ்தானின் முயற்சியை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் குழுவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, அல்பேனியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நிராகதித்துள்ளன.

முன்னதாக இதே நபரை பாகிஸ்தான் பயங்கரவாத பட்டியலில் சேர்க்க 2020 ஆம் ஆண்டு முயற்சி செய்தது. அப்போதும் பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தான் கோபிந்த பட்நாயக் துக்கிவலசாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 1267 குழுவில் பட்டியலிட திட்டமிட்டது.

ஆனால் பாகிஸ்தானின் இந்த முயற்சியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்த மாதத்திற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அல்பேனியா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் இணைந்து நிராகரித்துள்ளன.

ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.குருமூர்த்தி கூறுகையில், பயங்கரவாதத்திற்கான 1267 சிறப்பு நடைமுறையை மத நிறத்தை கொடுத்து அரசியலாக்க பாகிஸ்தான் அப்பட்டமாக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். கடந்த வாரம் பாகிஸ்தான் பயங்கரவாதியான அப்துல் ரெஹ்மான் மக்கியை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்ககோரி இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை சீனா 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தது.

Also Read: ஐநாவில் மக்கியை பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு தடை போட்ட சீனா.

அப்துல் ரெஹ்மான் மக்கி ஐ.நாவால் தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் முஹம்மது சயீத்தின் மைத்துனர் ஆவார். 26/11 மும்பை தாக்குதல் மற்றும் காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் லக்கிக்கு தொடர்பு உள்ளது. இந்தியாவால் லக்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவாலும் லக்கி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு லக்கி தலைக்கு 2 மில்லியன் டாலர் பரிசு தொகையும் அறிவித்துள்ளது.

Also Read: ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமல்படுத்த இந்தியாவை கட்டாயப்படுத்தவில்லை: அமெரிக்கா

Leave a Reply

Your email address will not be published.