குடியரசு தின விழாவில் முதன்முறையாக 1,000 ட்ரோன் ஷோ, லேசர் ப்ரோஜக்சன், 75 போர் விமானங்கள் ஈடுபட உள்ளன..?

இந்திய சுதந்திர தினத்தின் 75வத ஆண்டை கொண்டாடும் வகையில் ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும் பீட்டிங் தி ரிட்ரீட் விழாவின் ஒரு பகுதியாக முதன்முறையாக 1,000 ட்ரோன்கள்ன் கொண்ட ட்ரோன் ஷோ நடத்தப்படும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் உள்ள இந்திய தொழிற்நுட்ப கழக ஸ்டார்ட் அப் நிறுவனமான பாட்லாப் டைனமிக்ஸ் மூலம் ட்ரோன்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய ஆளில்லா விமான கண்காட்சியை இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நடத்தியுள்ளன. அதனை தொடர்ந்து ட்ரோன் கண்காட்சியை நடத்தும் நான்காவது நாடு இந்தியா ஆகும்.

இதுதவிர ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும் விழாவில் மற்றொரு கூடுதலாக புது டெல்லியில் உள்ள நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் அணிவகுப்பில் லேசர் ப்ரோஜக்சன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் லேசர் ஷோ இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை ஜனவரி 24 ஆம் தேதி குடியரசு தின கொண்டாட்டம் தொடங்கும் நிலையில் ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளில் கொண்டாடப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த முறை குடியகசு தின அணிவகுப்பு ஜனவரி 26 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு ஆண்டும் காலை 10.00 மணிக்கு தொடங்கும் நிலையில் இந்த முறை 10.30 மணிக்கு தொடங்குகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் விமான கண்காட்சியில் 75 விமானங்கள் கலந்துக்கொள்ள உள்ளன.

மேலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்த ஆண்டு 5,000 முதல் 8,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 25,000 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு முன்பு சுமார் 1,25,000 பார்வையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Also Read: லிபுலேக்கில் சாலை அமைக்கும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு நேபாளம் எதிர்ப்பு..

இந்த முறை இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பெரியவர்கள் மற்றும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒற்றை டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகள், சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த முறை சுதந்திர தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் கலந்து கொள்ள உள்ளன.

Also Read: PLFI நக்சல்களுடன் தொடர்பு.. டெல்லியில் வங்கதேச பெண்ணை கைது செய்த போலிஸ்..

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், ஹரியானா, கோவா, சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மேகாலயா, பஞ்சாப், உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் உட்பட 12 மாநில அலங்கார ஊர்திகள் கலந்து கொள்ள உள்ளன. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.