முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷன்சோ அபே சுட்டுக்கொலை.. கொண்டாடி வரும் சீனர்கள்..

நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்ட நிலையில். அதனை சீனர்கள் தங்களது சமூகவலைதலங்களில் கொண்டாடி வருகின்றனர். குற்றவாளியை ஹீரோ என பாராட்டியுள்ளனர்.

நேற்று தேர்தலை முன்னிட்டு ஜப்பானின் நாரா நகரில் ஷின்சோ அபே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரை பின்னால் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த அபே அங்கேயே கிழே சரிந்து விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்ற தகவல் பரவ ஆரம்பித்ததுமே சீனாவின், வெய்போ, விசாட் மற்றும் யூகு உள்ளிட்ட அனைத்து சமூகவலைத்தலங்களிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சீன மக்கள் பாராட்டி கொண்டாட ஆரம்பித்தனர். மேலும் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை ஒரு ஹீரோ எனவும், அவருக்கு பணம் அனுப்புவதாகவும் பாராட்டியுள்ளார்.

சீனர்கள் மட்டும் அல்லாமல் உலகம் எங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளும் ஷின்சோ அபேவின் கொலையை கொண்டாடி வருகின்றனர். அபே உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், வரவிருக்கும் மரணத்தை நன்றாக உணருவதாக சில பதிவிட்டனர்.

சீனர்கள் ஏன் ஷின்சோ அபே மரணத்தை கொண்டாட என்ன காரணம் என ஆராய்ந்தால், தற்போதைய காரணம் மட்டும் அல்லாமல் 90 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காரணமும் கூறப்படுகிறது. அதாவது, 193 ஆம் ஆண்டு ரஷ்ய எல்லையோரம் வடகிழக்கு சீனாவின் மஞ்சுகுவோவின் மாகாணத்தை ஜப்பான படையெடுத்து கைப்பற்றியது.

இந்த மாகாணத்தில் தொழில்துறை மேம்பாட்டு துணை அமைச்சராக நோபுசுகே கிஷி என்பவர் ஐப்பான் அரசால் நியமிக்கப்பட்டார். நோபுசுகே கிஷியும் ஜப்பானை சேர்ந்தவர் தான். மஞ்சுகுவோவின் மாகாணத்தில் முழு கட்டுப்பாட்டை கொண்டிருந்த நோபுசுகே கிஷி தொழில்மயமாக்கலுக்காக அப்பகுதியில் நிறுவப்பட்ட பெரிய தொழிற்சாலைகளில் சீனர்களை அடிமை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தியதாக கூறப்படுகிறது.

மேலும் நோபுசுகே கிஷி ஆளுமையின் கீழ் சீனர்கள் மீது இனவெறி மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. பின்னர் அவர் ஜப்பான் திரும்பி இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 1945 ல் ஜப்பானியர்கள் சரணடைந்த பிறகு, கிஷி A வகுப்பு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் போருக்கு பிந்தைய ஜப்பானை வழிநடத்த அமெரிக்காவால் அவர் அடையாளம் காணப்பட்டார். இதனால் இரண்டாம் உலகப்போரில் அவர் மீது எந்த விசாரணையும் அமெரிக்கா நடத்தவில்லை. பின்னர் நோபுசுகே கிஷி 1948 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் ஜப்பானில் அரசியலில் கால்பதித்த கிஷி, 1955 ஆம் ஆண்டு லிபரல் டெமாக்ரடிக் கட்சியை நிறுவினார்.

ஜப்பானில் இன்றுவரை இந்த கட்சி தான் செல்வாக்கு மிக்க கட்சியாகும். பின்னர் 1957 ஆம் ஆண்டு கிஷி பிரதமர் ஆனார். நோபுசுகே கிஷிக்கு நோபுகாசு கிஷி என்ற ஒரு மகனும், யோகா கிஷி என்ற ஒரு மகளும் இருந்தனர். யோகா கிஷி ஷிண்டாரோ அபே என்ற அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டார். யோகோ கிஷி மற்றும் ஷிண்டாரோ அபே தம்பதியினரின் இரண்டாவது மகன் தான் நேற்று சுட்டுக்கொள்ளப்பட்ட ஷின்சோ அபே.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் யாருமே ஜப்பான இராணுவத்தை நவீன படுத்தாத நிலையில், ஜப்பானின் தற்காப்புக்காக ஷின்சோ அபே இராணுவத்தை நவீன படுத்தினார். இது சீனர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் ஷின்சோ அபே வலதுசாரி ஆவார். இடதுசாரியான கம்யூனிஸ்ட்டுகளுக்கு வலதுசாரியான ஷின்சோ அபேவை பிடிக்காததால், அவர் மீதான விமர்சனம் அதிகரித்தது.

இந்த நிலையில் தான்அவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அதனை சீனர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இது திட்டமிட்ட வெளிநாட்டு கொலையா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. சமீப காலமாக சீனாவிற்கு எதிராக உள்ள நாடுகளின் முக்கிய நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி 2, 2020 ஆம் ஆண்டு தைவானின் இராணுவ தலைவர் ஜெனரல் ஷென் யி-மிங் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

சீனாவுடன் மோதல் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் சீனா தான் நமது முதல் எதிரி என கூறிய இந்தியாவின் முதல் முப்படைதளபதி ஜெனரல் பிபின் ராவத், கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தற்போது சீனா தைவானை கைப்பற்றினால் ஜப்பான் தாக்குதல் தொடுக்கும் என கூறிய ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.