முன்னாள் பாகிஸ்தான் இராணுவ வீரருக்கு பத்மஸ்ரீ விருது.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
முன்னாள் பாகிஸ்தான் வீரரான லெப்டினன்ட் கர்னல் காஜி சஜ்ஜத் அலி ஜாஹிர்க்கு 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பங்களாதேஷ் போரின் போது இந்தியாவிற்கு உதவியதற்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
காஜி சஜ்ஜத் அலி ஜாகிர் கிழக்கு பாகிஸ்தானில் பிறந்தவர். 1971 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பாகிஸ்தான் குடியுரிமையும் 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு பங்களாதேஷ் குடியுரிமையும் கொண்டவர். ஜாகிர் சியால்கோட்டில் பாகிஸ்தானால் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 20.
முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் அதாவது தற்போதைய பங்களாதேஷில் பாகிஸ்தான் இராணுவத்தின் அட்டூளியங்கள், மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தார். இருப்பினும் அவரை பாகிஸ்தான் உளவாளியாகவே கருதி இந்திய அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்தினர்.
முதலில் எல்லை பாதுகாப்பு படையாலும் பின்னர் பதான்கோட் கொண்டு செல்லப்பட்டு அங்கு உள்ள இராணுவ அதிகாரிகளாலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தன்னை நம்ப வைப்பதற்காக தன்னிடம் இருந்த பாகிஸ்தான் இராணுவத்தை பற்றிய இரகசிய ஆவணத்தை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்த பின்பு தான் அவரை டெல்லியில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டார்.
பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்கொள்ள அவருக்கு கொரில்லா போர் பயிற்சி வழங்கப்பட்டது. ஜாகிர் கூறுகையில் பாகிஸ்தானில் அவரது பெயரில் கடந்த 50 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிலுவையில் உள்ளதாக பெறுமையுடன் குறிப்பிட்டார்.
அவரது சேவையை பாராட்டி பங்களாதேஷ் அரசு, பிர் ப்ரோடிக் மற்றும் நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ஸ்வாதிநாத பதக் விருதினால் கௌரவிக்கப்பட்டார். இந்திய துணைகண்டத்தின் இராணுவத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
Also Read: இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..
விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க அதனை லெப்டினன்ட் கர்னல் காஜி சஜ்ஜித் அலி ஜாகிர் பெற்றுக்கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது கொரோனா தொற்று காரணமாக தற்போது வழங்கப்படுகிறது.