முன்பு இந்திய அரசுக்கு எதிராக CAA போராட்டம்.. தற்போது கண்ணீருடன் காப்பாற்ற கோரிக்கை..

உக்ரைனில் இருந்து தன்னை வெயியேற்றாத இந்திய அரசுக்கு எதிராக உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர் ஒருவர் இந்திய அரரை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உக்ரைனில் தற்போது போர் நடந்து வரும் நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்களை மத்திய அரசு மீட்டு தாயகம் அழைத்து வரும் நிலையில், ரஷித் ரிஸ்வான் என்ற மாணவர் தன்னை அழைத்து செல்ல இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோபத்தை வெயிபடுத்தியுள்ளார்.

உக்ரைன் எல்லைக்கு அருகே பத்து மணி நேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டதாகவும், எந்த இந்திய அதிகாரியும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் குழு நேற்று மதியம் எல்லைக்கு சென்றதாக கூறியுள்ளார்.

மோடி அரசை தாக்கி பேசிய ரிஸ்வான், மத்திய அரசு மற்றும் அதன் அதிகாரிகளின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியர்களை வெளியேற்றுவதில் மத்திய அரசு தோல்வியடைந்ததாக கூறப்படும் ரிஸ்வானின் வீடியோ சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.

ரிஸ்வானின் இந்த கருத்துக்கு எதிர்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ரிஸ்வானின் பின்னணியை கண்டுபிடித்து நெட்டிசன்கள் ரிஸ்வானை விமர்சித்து வருகின்றனர். வெளிவந்துள்ள தகவலின் படி, ரிஸ்வான் பீகாரின் கோபால்கஞ்ச மாவட்டத்தை சேர்ந்தவர். ரிஸ்வான் தொடர்ந்து இந்திய எதிர்ப்பை கடைபிடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டில் ரிஸ்வான் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், உயிருக்கு போராடும் தனது தாத்தாவின் உடலில் மூன்று வயது குழந்தை அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதனை பகிர்ந்து காஷ்மீர் சிரியாவாக மாறிவிட்டது என பதிவிட்டார். ஆனால் அவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார் என்பதை மறைத்து மோடி அரசுக்கு எதிராக பதிவிட்டார்.

மோடி அரசின் பெயரை குறிப்பிடாமல் சொர்க்கமாக இருந்த காஷ்மீரை அரசு நரகமாக மாற்றியிருக்கிறது என தெரிவித்துள்ளார். அதேபோல் ரிஸ்வானின் மற்றொரு பதிவும் வைரலாகி வருகிறது. அதில் ரிஸ்வான் உக்ரைனில் உள்ள தனது கல்லூரிக்கு வெளியே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக அந்நிய மண்ணில் இந்திய அரசுக்கு எதிராக போராடியதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரிஸ்வான் இஸ்லாமியவாதியை ஆதரிக்கும் இந்து எதிர்ப்பு மனநிலை கொண்டவர் என கூறப்படுகிறது.

டெல்லி கலவரத்தின் போது மத்திய அரசு இஸ்லாமியர்களை மட்டுமே கைது செய்வதாகவும், குற்றவாளி இந்துவாக இருந்தால் கைது செய்யப்படுவதில்லை என்றும் கூறியிருந்தார். மோடி அரசு விவசாய சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்த பிறகு, இது விவசாயிகளின் வெற்றி மட்டுமல்ல, CAA போராட்டத்தின் வெற்றியும் கூட என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேசன் கங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிற்து. உக்ரைனில் 18,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், 1,000 க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்க அரசு அதிகாரிகள் மற்றும் விமானங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. ரஷ்யா, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலந்து போன்ற நாடுகளின் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.