சீனாவிற்கு செல்லும் எரிவாயு கப்பல்களை ஐரோப்பாவிற்கு திருப்பும் பிரான்ஸ்..

தற்போது ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் விலைவாசி உயர்வு ஐரோப்பிய யூனியன் முழுவதும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. ஐரோப்பாவின் இந்த நெருக்கடிக்கு காரணம் ரஷ்யா தான் என ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது.

ஐரோப்பாவில் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எரிவாயு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் இதனை சீனாவுக்கு எதிராக திருப்பவும் ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. சீனாவிற்கு செல்லும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பிவிட திட்டமிட்டுள்ளது.

ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் சீனாவிற்கு எரிவாயு ஏற்றி செல்லும் விற்பனையாளர்களை ஐரோப்பாவிற்கு திருப்பகோரி ஐரோப்பிய யூனியன் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவிற்கு எரிவாயுவை விற்பதன் மூலம் அரிய வகை பிரீமியத்தை விற்பனையாளர்கள் பெறுவார்கள்.

மேலும் விற்பனையாளர்களும் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்ய ஆர்வமாக உள்ளனர். தற்போது ஐரோப்பாவில் எரிவாயு விலை உச்சத்தில் இருப்பதால் விற்பனையாளர்கள் ஐரோப்பாவிற்கு விற்று லாபம் பார்த்து வருகின்றனர். சீனாவில் தொழிற்சாலைகள் செயல்பாடுகள் குறைந்துவிடுவதாலும், குளிர்கால ஒலிம்பிக்கிற்கு முன்னதாக மாசு கட்டுபாட்டுகள் அமலுக்கு வருவதாலும் சரக்குகள் சீனாவில் இருந்து திரும்புகின்றன.

Also Read: சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் இருந்து விலகும் தாய்லாந்து..?

சீனா பொருளாதார நெருக்கடி காரணமாக எரிவாயு இறக்குமதியை குறைத்து வருகிறது. இந்தநிலையில் சீனாவுக்கு செல்லும் எரிபொருள் ஏற்றுமதியை திசைதிருப்புவதன் மூலம் சீனாவில் எரிபொருள் பற்றாக்குறையை வழிவகுக்கும். ஐரோப்பாவிற்கு சரக்குகளை திருப்பிவிடுவதன் மூலம் சீனாவில் விலைவாசி உயர்ந்து எரிபொருள் இருப்பு குறையும்.

தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக பிரான்ஸ் பொறுப்பேற்றுள்ளது. பிரான்ஸ் எரிசக்தி கொள்கையை தீர்மானிப்பதால் சீனா மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.