ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் ஆற்றலிருந்து இந்தியா விலக பிரான்ஸ் உதவும்..!

டென்மார்க் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை எலிசி அரண்மனையில் கட்டித்தழுவி வரவேற்றார் பிரான்ஸ் அதிபர். புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நிலையில் மக்ரோனின் மனைவியும் பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த நிலையில் இந்தியாவும் பிரான்சும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நீண்ட காலமாக இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியிலான நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலில் இந்தியா ரஷ்யாவை கண்டிக்காமல் நடுநிலையாக செயல்படுவதால் சில நாடுகளின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது.

இந்த நிலையில் பாரிஸில் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் இரவு விருந்திற்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை இருநாடுகளும் கண்டித்த நிலையில், போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.

Also Read: பாகிஸ்தான் இத்தாலி இடையே தொழிலாளர் ஒப்பந்தம் கையெழுத்து..?

இருப்பினும் ரஷ்ய படையெடுப்பை பிரான்ஸ் மட்டுமே கண்டித்தது. முன்னதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அப்பால் ஆசியா உட்பட சர்வதேச ஒழுங்கிற்கான போரின் விளைவுகளை மோடியிடம் வலியுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் ஆற்றலிருந்து விலகி இந்தியர்கள் தங்கள் விநியோகத்தை பல்வகைப்படுத்த பிரான்ஸ் விரும்புகிறது. அதன் நோக்கம் இந்தியர்களை வழியின்றி விடுவது அல்ல, அதற்கு தீர்வுகளை வழங்குவது என கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிரான்சிற்கு மேற்கொள்ளும் ஐந்தாவது பயணம் இதுவாகும்.

Also Read: பாகிஸ்தானியருக்கு விசா வழங்குவதை நிறுத்தியது துருக்கி..?

இதற்கு முன்பு 2015 ஏப்ரல் மற்றும் நவம்பர், 2017 ஜூன், 2019 ஆகஸ்ட் மாதம் பிரான்சிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்தியா பிரான்சின் ரபேல் போர் விமானங்கள் மற்றும் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியுள்ளது. மேலும் சிவில் அணுசக்தி திட்டங்களிலும் இணைந்து செயல்படுகிறது. தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய பயணத்தை முடித்துவிட்டு இன்று டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published.