இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கினி உடைக்கு தடை விதித்த பிரான்ஸ் நீதிமன்றம் ..?

இஸ்லாமிய பெண்கள் நீச்சலுக்காக பயன்படுத்தப்படும் உடலை மறைக்கும் புர்கினி உடையை பொது குளங்களில் பயன்படுத்த கீழமை நீதிமன்றம் விதித்த தடையை பிரான்சின் உயர் நிர்வாக நீதிமன்றம் செவ்வாய் கிழமை உறுதி செய்தது.

புர்கினி உடைகளுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக பிரான்சின் கிழக்கு நகரமான கிரேனோபிள் நகரம் உயர் நிர்வாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம் புர்கினி உடையை கிரேனோபிள் பொது குளங்களில் பயன்படுத்த தடை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை இறுதி செய்து உத்தரவிட்டது.

புர்கினியை அனுமதித்தால் அனைவரையும் சமமாக நடத்தப்படுவது பாதிக்கப்படும் எனவும், அரசாங்க நடுநிலை கொள்ளையை மீறுவதாக ஆகிவிடும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்களின் தொடர்ச்சியான போராட்டங்களை தொடர்ந்து கிரீன்ஸ் கட்சியின் மேயர் தலைமையிலான கிரேனோபிள் நகரம் புர்கினி உடையை அனுமதித்தது.

இந்த நிலையில் கிரேனோபிள் பிராந்தியத்திற்கான உயர்மட்ட அரசாங்க அதிகாரி புர்கினி முடிவை தடுத்து அது பிரான்சின் மதச்சார்பற்ற கொள்ளைகளுக்கு எதிரானது என வாதிட்டார். இருப்பினும் நீதிமன்றம் விதித்துள்ள தடையை வரவேற்றுள்ள உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின், உயர் நிர்வாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மதச்சார்பின்னைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

Also Read: ஐநாவில் மக்கியை பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு தடை போட்ட சீனா..

சுகாதாரம் காரணமாக பொது குளங்களில் கடுமையான ஆடை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. குளங்களில் நீச்சல் தொப்பிகள் கட்டாயமாகும். மேலும் ஆண்கள் பேக்கி நீச்சல் டிரங்குகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேக்கி நீச்சலுடைகள், வெட்சூட்கள் அல்லது சூரிய பாதுகாப்பு உடைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புர்கினி உடையும் தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.