பாகிஸ்தானில் இருந்து வந்த 17 இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிய குஜராத் அரசு..!

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 17 இந்து அகதிகளுக்கு அகமதாபாத் கலெக்டர் சந்தீப் சாகலே இந்திய குடியுரிமை வழங்கியுள்ளார்.

அகமதாபாத் மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 17 அகதிகளுக்கு அகமதாபாத் மாவட்ட கலெக்டர் சந்தீப் சாகலே இந்திய குடியுரிமையை வழங்கியுள்ளார். பின்னர் அவர்களுடன் கலெக்டர் உரையாடினார்.

தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் உடனடி நடவடிக்கை எடுத்தற்காக அகமதாபாத் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த இந்து அகதிகள், இந்தியாவில் அமைதி இருப்பதாக உணர்ந்ததாக கூறியுள்ளனர். குடியுரிமை சட்ட விதிகளின் கீழ், 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினர் அரசியலமைப்பு செயல்முறையை பின்பற்றிய பிறகு இந்திய குடியுரிமையை பெறுகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில், இந்திய குடியுரிமையை பெற்ற விண்ணப்பதாரர்களில் 87 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 5 ஆண்டுகளில் இந்து, சீக்கியம், ஜெயின் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த 5,220 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதில் 4,552 பேர் பாகிஸ்தானை சேர்ந்த சிறுபான்மையினர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Also Read: கார்கிலில் புத்த கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு.. மாபெரும் பேரணி நடத்திய புத்த துறவிகள்..

Also Read: இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 2 சீனர்களை கைது செய்த பாதுகாப்பு படையினர்..

Leave a Reply

Your email address will not be published.