பாகிஸ்தானில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை: AICTE அதிரடி

பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் தங்களை சேர்த்து கொள்ள வேண்டாம் என இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2022-23 CBSE பாடத்திட்டத்தில் இருந்து உருது கவிஞர் அகமது ஃபைஸின் வசனங்கள் 10 ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) செயலாளரால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டு மாணவர்கள் அனைவரும் உயர் கல்விக்காக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் தங்களை சேர்த்து கொள்ள வேண்டாம். எச்சரிக்கையை மீறி தங்களை சேர்த்து கொள்வோர் உயர்கல்வி கற்கவோ அல்லது நாட்டில் வேலை தேடவோ தகுதியற்றவர்கள் என கல்வி கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் இருந்து இது இரண்டாவது எச்சரிக்கை ஆகும். கடந்த மார்ச் மாதம் சீனாவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டி, பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) ஆகியவை சீன பல்கலைக்கழகங்களில் படிப்புகளை தொடர ஆர்வமுள்ள மாணவர்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்து இருந்தது.

Also Read: மோசடியில் ஈடுபட்ட 40 சீனர்கள் உட்பட 150 பேர் மீது FIR பதிவு செய்த மும்பை போலிஸ்..?

கொரோனா கட்டுப்பாடு காரணமாக அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்ப முடியவில்லை. மேலும் சீனா இதுவரை கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கவில்லை. இதனால் படிப்புகள் ஆன்லைனில் தொடரப்படும் என சீனா கூறியது.

Also Read: ஜெய்சங்கர் ஒரு அனுபவமிக்க இராஜதந்திரி.. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டு..!

ஆனால் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழிற்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE), முன் அனுமதியின்றி ஆன்லைன் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் பட்டப்படிப்புகளை அங்கீகரிக்காது என எச்சரித்து இருந்தது. வேலைவாய்ப்பு அல்லது உயர் படிப்பில் மேலும் சிக்கலை தவிர்க்க உயர்கல்வியை எங்கு தொடர்வது என்பதை தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் தகுந்த விடாமுயற்சியுடன் செயல்பட அறிவுறுத்துவதாக கல்வி கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.