அக்டோபரில் GST வரி வருவாய் 1.30 லட்சம் கோடியை கடந்து சாதனை.. வளர்ச்சியில் பின்னோக்கி தமிழகம்..

GST வரி வருவாய் சென்ற மாதம் 1,30,127 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இது GST அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இரண்டாவது அதிகபட்சமாகும். இது இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதையே காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 24 சதவீதம் வளர்ச்சி ஆகும். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 36 சதவீதம் வளர்ச்சி ஆகும். கடந்த மாதம் CGST 23,861 கோடியும், SGST 30,421 கோடியும், IGST 67,361 கோடியும், செஸ் வரி 8,484 கோடியும் வசூல் ஆகியுள்ளது.

IHS மார்கெட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி துறை 55.9 PMI புள்ளிகளை பெற்றுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 53.7 PMI புள்ளிகளாக இருந்தது. 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தாலே அது வளர்ச்சியை குறிக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதமாகவே இந்திய பொருளாதாரம் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளது. இது இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதையே காட்டுகிறது.

இதேபோல் இந்தியாவின் ஏற்றுமதியும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 35.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 55.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை 19.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

ஏற்றுமதி அதிகரித்தும் இறக்குமதி குறைவாக இருப்பதும் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதையே காட்டுகிறது. 2022 ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி 400 பில்லியன் டாலராகவும், 2023 ஆம் நிதியாண்டில் 500 பில்லியன் டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதால் GST வரி வருவாய் அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இது இரண்டாவது அதிகபட்ச வசூல் ஆகும். தமிழகம் GST வருவாயில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6,901 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7,642 கோடியாக 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

Also Read: தீபாவளி பண்டிகை விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடி நஷ்டம்..? CAIT அறிவிப்பு..

அதேபோல் உத்திரபிரதேசம் 5,471 கோடியில் இருந்து 6,775 கோடியாக 24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. குஜராத் 6,787 கோடியில் இருந்து 8,497 கோடியாக 25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகா 6,998 கோடியில் இருந்து 8,259 கோடியாக 18 சதவீதமும், மகாராஷ்ட்ரா 15,799 கோடியில் இருந்து 19,355 கோடியாக 23 சதவீதம் வரிவசூல் அதிகமாகி உள்ளது.

Also Read: இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

சிப் பற்றாக்குறையால் ஹரியானா 5,433 கோடியில் இருந்து 5,606 கோடியாக 3 சதவீத வளர்ச்சியுடன் உள்ளது. மேற்கு வங்கம் கடந்த ஆண்டு அக்டோபரில் 3,738 கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4,259 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. மேல் உள்ள மாநிலங்களில் தமிழகம் மட்டுமே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் என்ற குறைவான வளர்ச்சியை கொண்டுள்ளது.

Also Read: நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

Leave a Reply

Your email address will not be published.