பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் ஹசனாபாத் பாலம் இடிந்து விபத்து..?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலையில் உள்ள ஹசனாபாத் பாலம் சனிக்கிழமை ஷிஷ்பர் பனிப்பாறை வெடிப்பால் அடித்து செல்லப்பட்டது. தற்போது அந்த பாலத்திற்கு பதிலாக மாற்று வழியை பயன்படுத்துமாறு பொதுமக்களை பாகிஸ்தான் நெடுஞ்சாலைத்துறை கேட்டுகொண்டுள்ளது.

சனிக்கிழமை அன்று கடுமையான வெப்பம் காரணமாக ஷிஷ்பர் பனிப்பாறையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை பனிப்பாறை சேதப்படுத்தியுள்ளது. மேலும் காரகோர நெடுஞ்சாலையும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

இதனால் காரகோரம் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் முக்கிய பாலமாக இருக்கும் இந்த பாலத்தை பாதுகாக்க பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டும் காப்பாற்ற முடியவில்லை.

Also Read: ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் ஆற்றலிருந்து இந்தியா விலக பிரான்ஸ் உதவும்..!

பாலம் இடிவதற்கு சற்றுமுன் மாவட்ட நிர்வாகம் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பேரிடர் மேலாண்மை அமைப்பு வடிகால் சுற்றி அவசர நிலையை அறிவித்து அங்கிருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலையை மாற்றாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால அடிப்படையில் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹன்சா காவல் கண்காணிப்பாளர் ஜாஹுர் அகமது கூறுகையில், வெப்பம் காரணமாக பனிப்பாறை சனிக்கிழமை உருகத்தொடங்கியதால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

Also Read: சீனாவின் கப்பல் பொறி.. மற்றொரு நெருக்கடியை சந்திக்கும் உலக நாடுகள்..

மேலும் சுற்றுலா பயணிகள் கனிஷ் மற்றும் முர்தாசாபாத் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாலத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாக ஹன்சா காவல் கண்காணிப்பாளர் ஜாஹுர் அகமது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.