ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து.. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை..

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் குறுகிய தூர வான் ஏவுகணைகள் மற்றும் 14 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களை திரும்ப பெற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இதனை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சகம் பல பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை நிறுத்தியுள்ளது அல்லது கிடப்பில் போட்டுள்ளது, இது இந்திய உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும். டெல்லியில் வெள்ளிகிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

இறக்குமதி ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், பீரங்கி துப்பாக்கிகள், வான் ஏவுகணைகள், கப்பலில் பறக்கும் ஆளில்லா வான்வழி அமைப்புகள், மிக்-29 போர் விமானங்கள் மற்றும் P-8I கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்ட இறக்குமதி தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகும்.

மேலும் பர்ப்பஸ் மெஷின் துப்பாக்கிகள், ஏவுகணை ஒப்பந்தம், ரஷ்யா உடனான Kamov-226 ஹெலிகாப்டர் ஒப்பந்தம், Kamov-31 கப்பல் ஹெலிகாப்டர்கள் மற்றும் க்ளப் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Also Read: இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ஒப்புதல்..

கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் அப்போதைய முப்படை தளபதி CDS ஜெனரல் பிபின் ராவத்தும் கலந்து கொண்டார். நாடு பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு அடையும் நோக்கில் மேக் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

Also Read: சீனாவுக்கு எதிராக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா..

மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது நாட்டிற்குள் பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இது இந்தியாவை பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு அடைய வழிவகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.