ரஷ்யா உடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து..?உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு..

பிரதமர் நரேந்திர மோடியின் கனவான பாதுகாப்புத்துறையில் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 48 Mi-17V5 ஹெலிகாப்டரை வாங்கும் முடிவை இந்திய விமானப்படை நிறுத்தி வைத்துள்ளது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே 80 Mi-17V5 ஹெலிகாப்டரை வாங்குவதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் அதில் 48 Mi-17V5 ஹெலிகாப்டருக்கான டெண்டரை நிறுத்தி வைக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் வெடிப்பதற்கு முன்பே எடுக்கப்பட்டது.

ஒப்பந்தம் ரத்து செய்வதற்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுமயமாக்கலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக இந்தியாவிலேயே ஹெலிகாப்டர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக மத்திய அரசு பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு தடவாளங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது அல்லது நிறுத்தி வைத்துள்ளது. Mi-17V5 ஹெலிகாப்டர் ரஷ்யாவில் உள்ள கசான் நகரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது இந்திய விமானப்படை பயன்படுத்தும் நவீன ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர் ஆகும்.

Also Read: ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. எச்சரித்த தாலிபான்..

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அதன் VVIP களின் பயணங்களுக்கு இந்த ஹெலிகாப்டர் தான் பயன்படுத்தப்படுகிறது. இது சியாச்சின் பனிப்பாறை, கிழக்கு லடாக்கில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள உயரமான மற்றும் தொலைதூர பகுதிகளுடன் தினசரி அடிப்படையில் இந்திய நிலைகளை பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Also Read: அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு.. 6 பேரை கைது செய்த அசாம் போலிசார்..?

இது வெப்ப மண்டல, கடல் காலநிலை மற்றும் பாலைவன நிலைகள் உட்பட அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படக்கூடியது. இந்திய விமானப்படை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு ஏவுகணைகள், போர் விமானங்கள், ALH துருவ் மற்றும் இலகுரக போர் ஹெலிகாப்டர் ஆகியவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.