ஹிஜாப் ஒரு தேர்வு.. சேலை அணிந்து புகைப்படம் வெளியிட்ட இஸ்லாமிய பத்திரிக்கையாளர்..

பத்திரிக்கையாளர் ரூபியா லியாகத் சேலையில் கார் ஓட்டும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிலையில், அவருக்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தற்போது சமுக வலைதலங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த ரூபியா லியாகத் தனது டிவிட்டர் பதிவில், “ஒரு பெண் தயாராகி அலங்கரிக்கப்பட்டிருக்கும் போது, அவள் ஓட்டுனர் இருக்கையில் இருக்க கூடாது என ஏன் மக்கள் நினைக்கிறார்கள். தவறு செய்யாதீர்கள், நீங்கள் தயாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்டீயரிங் எப்போதும் உங்கள் கையில் இருக்க வேண்டும்” என தனது டிவிட்டர் பதிவில் சேலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

ரூபியா லியாகத்தின் இந்த இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரூபியா லியாகத் ஹிஜாப் பிரச்சனையின் போது, பள்ளிகளில் சீரான தன்மையை ஆதரித்தார். சீருடைக்கு பதிலாக மத உடைகளை அணிவதை அவர் ஆதரிக்கவில்லை. இது இஸ்லாமியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் இஸ்லாத்திற்கு எதிரானவர் என குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த மாதம் கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரியை சேர்ந்த சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் சீருடையை மட்டுமே அணிந்து வர வேண்டும் என கூறி ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ மாணவிகளும் காவி துண்டு அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மாணவர் மத அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்பு கொண்ட பிறகு தான் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ஹிஜாப் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.