பாகிஸ்தானின் சிந்துவில் இந்து சிறுவன் மர்ம நபர்களால் கடத்தல்..?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த மைனர் சிறுவன் ஒருவனை அவனது இல்லத்திற்கு வெளியே மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திங்கள் கிழமை காலை ராணிப்பூர் நகரத்தில் சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே இரு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளான். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை கடத்தி சென்றனர்.

இந்துக்கள் பகுதியான அங்கு முதலில் இரண்டு சிறுவர்களை கடத்த முயன்றனர். முடியாததால் ஒரு சிறுவனை மட்டும் கடத்தி சென்றுள்ளனர். உள்ளுர் மக்கள் மர்ம நபர்களை துரத்தி சென்ற நிலையிலும் அவர்கள் தப்பியோடிவிட்டதாக சிறுவனின் மாமா தெரிவித்துள்ளார். சிறுவனின் தந்தை ஹீரோ மல் கூறுகையில், தாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், தனது மகனை மீட்க பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்களிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால் பணம் வசூலிக்கும் நோக்கில் தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அவர் கூறியுள்ளார். சிறுவன் கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்து அமைப்பினர் காவல் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனை மீட்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Also Read: பாகிஸ்தானில் பிரசவத்தின் போது இந்து பெண்ணின் குழந்தையின் தலையை துண்டித்த மருத்துவமனை ஊழியர்கள்..

சில வாரங்களுக்கு முன்பு உலக குழந்தைகள் தினத்தன்று கைர்பூர் மிரின் பாபர்லோய் நகரில் இருந்து ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் என உள்ளுர் ஆர்வலர் ஜமீர் சோலங்கி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர், குழந்தைகள் மற்றும ஊடகவியலாளர்களின் மோசமான நிலைமையால் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.

Also Read: அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள்.. அவசர நிலையை அமல்படுத்திய பாகிஸ்தான்..?

சிந்துவில் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் அதிகமாகிவிட்டன. இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்துவ பெண்களை கடத்துவது, பாலியல் பலாத்காரம் செய்வது மற்றும் கட்டாய மதமாற்றம் செய்வது ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Also Read: பாகிஸ்தானில் 2 இந்து சிறுமிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..

Leave a Reply

Your email address will not be published.