இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தில் ஹம்மர் ஏவுகணை.. சீன எல்லையில் நிலைநிறுத்த முடிவு..

சீனாவுடன் மோதல் நிலவி வருவதால் இந்தியாவின் தேஜஸ் விமானத்தில் ஹம்மர் ஏவுகணையை பொருத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரான்சிடம் ஹம்மர் ஏவுகணைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹம்மர் ஏவுகணை வானிலிருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை. ஹம்மர் ஏவுகணை ஏற்கனவே ரபேல் விமானத்தில் மாற்றம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. அதே போல் தேஜஸ் விமானத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்ட ஹம்மர் ஏவுகணைகளை பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்க உள்ளது.

ஹம்மர் ஏவுகணை மூலம் எதிரி நாடுகளின் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராணுவ நிலைகளை தாக்கி அழிக்க முடியும். அதாவது ரபேல் விமானத்திற்கு இணையான தாக்குதலை ஹம்மர் ஏவுகணை பொருத்தப்பட்ட தேஜஸ் விமானத்தால் நடத்த முடியும். ஏற்கனவே தேஜஸ் விமானத்தில் ஹம்மர் ஏவுகணை பொறுத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது.

ஹம்மர் ஏவுகணை 125 கிலோகிராம், 250,500 மற்றும் 1,000 கிலோகிராம் என நான்கு வகைகளில் உள்ளது. இதில் இந்தியா 250 மற்றும் 500 கிலோகிராம் எடையுள்ள ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிடம் உள்ள மிராஜ் 2000 போர் விமானத்திலும் இந்த ஹம்மர் ஏவுகணை பொருத்தப்பட உள்ளது.

Also Read: துபாய் ஏர் ஷோ 2021.. வானில் பறந்த இந்தியாவின் தேஜஸ்.. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..

அதாவது ஒரே வகையை சேர்ந்த ஏவுகணை இந்தியாவின் ரபேல், தேஜஸ், மிராஜ் 2000 என அனைத்து போர் விமானங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் தேஜஸ் விமானம் சீனாவின் JF17யை விட மேம்பட்டது. சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் லடாக்கில் 2 தேஜஸ் ஃபைட்டர் ஸ்குட்ரான்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Also Read: பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்கப்பல் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வழங்கியுள்ள சீனா..

தற்போது ஹம்மர் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டால் அது சீனாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். மேலும் பாலகோட் போன்ற தாக்குதல்களை தேஜஸ் விமானத்தில் இருந்து துல்லியமாக நடத்த முடியும். மேலும் ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணை பொருத்தப்பட்ட ரபேல் மற்றும் தேஜஸ் போர் விமானங்கள் சீன எல்லையோரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பயங்கரவாத தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் கமாண்டன்ட், அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் பலி.. பிரதமர் மோடி கண்டனம்..

Leave a Reply

Your email address will not be published.